முதலீடுகளை திரட்டும் தமிழகம் - வேலை வாய்ப்பு அதிகரிக்குமா ?

விண்வெளி, விமானம் மற்றும் ராணுவ தளவாட உற்பத்தி துறையில் தமிழகம் முதலீடுகளை ஈர்த்து வரும் நிலையில், தொழில் கொள்கைகளிலும் மாற்றம் கொண்டு வர தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது.
முதலீடுகளை திரட்டும் தமிழகம் - வேலை வாய்ப்பு அதிகரிக்குமா ?
x
விண்வெளி, விமானம் மற்றும் ராணுவ தளவாட உற்பத்தி துறையில் தமிழகம் முதலீடுகளை ஈர்த்து வரும் நிலையில், தொழில் கொள்கைகளிலும் மாற்றம் கொண்டு வர தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டில் தமிழகத்தின் தொழில் கொள்கைகள் குறித்த அறிவிப்பினை தமிழக அரசு வெளியிட்டது. இந்த நிலையில், ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தின் கீழ், பாதுகாப்பு மற்றும் விண்வெளி தொழில் கொள்கைகளை வகுப்பதற்கான  காணொளி கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.இந்திய ராணுவ உற்பத்தி நிறுவனங்கள், தொழில் பிரதிநிதிகளுடன்   தமிழ்நாடு தொழில்நுட்ப மேம்பாடு நிறுவனம் இணைந்து திட்டங்களை இறுதி செய்து வருகிறது. அடுத்த 10 ஆண்டுகளில், சென்னை, கோவை, காஞ்சிபுரம், திருச்சி, கிருஷ்ணகிரி மற்றும் சேலம் ஆகிய இடங்களில் 70 ஆயிரம் கோடி முதலீடுகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. விண்வெளி, விமான துறையில், வடிவமைப்பு, இன்ஜின், இயந்திரங்கள்  உற்பத்தி ஆகியவை இணைந்த ஒருங்கிணைந்த  பணிகள் தமிழகத்திலேயே நடைபெற உள்ளன.கொரோனா தொற்று காலத்திலும்,  ஜெர்மனி, பின்லாந்து, பிரான்ஸ், ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் பிரிட்டன் நாடுகளில் இருந்து தமிழகம் முதலீடுகளை திரட்டி உள்ளது. புதிய முதலீடுகள் மூலம் பொருளாதார வளர்ச்சியை ஊக்கப்படுத்துவது, சிறு தொழில் நிறுவனங்களுக்கு உதவி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்திலும் மாற்றம் இருக்கும் என்பதே சந்தை நிபுணர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்