மதுரை : சமூக இடைவெளி இன்றி செயல்பட்ட கடைகளுக்கு சீல் - பறக்கும்படையினர் அதிரடி

மதுரை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் வரும் 30 ஆம் தேதிவரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மதுரை : சமூக இடைவெளி இன்றி செயல்பட்ட கடைகளுக்கு சீல் - பறக்கும்படையினர் அதிரடி
x

மதுரை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் வரும் 30 ஆம் தேதிவரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சமூக இடைவெளியின்றியும், முக கவசங்கள் அணியாமல் இருந்த பத்துக்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும், முக கவசங்கள் அணியாமல் வந்த வாகன ஒட்டிகள், பொதுமக்கள் என 200-க்கும் மேற்பட்டோருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. 

மாலை 6 மணிக்கே மூடப்பட்ட டாஸ்மாக் கடை - ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற மதுப்பிரியர்கள்

திருவாரூர் மாவட்டத்தில், கொரோனா பரவலை தடுக்கும் விதமாக, டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரம் 2 மணி நேரம் குறைக்கப்பட்டு மாலை 6 மணிக்கே மூடப்பட்டது. இதை அறியாத குடிமகன் மாலை 6 மணிக்குமேல் வந்து, மதுபானக் கடையின் முன்பு, சமூக இடைவெளியின்றி கூட்டம் கூட்டமாக காத்திருந்தனர். இதையடுத்து, அங்கு வந்த காவல்துறையினர், மதுப்பிரியர்களை விரட்டியடித்ததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

உயிரிழந்தவருக்கு கொரோனா தொற்று - இறுதி சடங்கில் பங்கேற்றவர்கள் அச்சம்

நெல்லை மாவட்டம், பணங்குடியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுவந்து உயிரிழந்த நிலையில், அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவரின் இறுதி சடங்கில் பங்கேற்றவர்கள், தங்களை தனிமைப்படுத்தி கொள்ளவும், பரிசோதனை செய்து கொள்ளுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. பரிசோதனை முடிவுக்கு முடிவுக்கு முன் உடலை, உறவினர்களிடம் கொடுத்தால், தற்போது நாள்தோறும் ஏராளமானோர், பரிசோதனை மேற்கொள்ளவேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு - துணை ஆட்சியர் அறிவிப்பு

ஸ்ரீவில்லிபுத்தூரில், நாளை முதல் ஆகஸ்ட் இரண்டாம் தேதி வரை தளர்வுகளே இல்லாத ஊரடங்கு  அறிவிக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக, ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டத்திலுள்ள 28 கிராமங்களுக்கு முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுவதாக, துணை ஆட்சியர் முருகன் அறிவித்துள்ளார். மேலும், பால் மற்றும் மருந்து கடைகளுக்கு மட்டும்  இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ராணுவ வீரருக்கு, மாவட்ட ஆட்சியர் உதவி - சிகிச்சைக்காக பெங்களூரு செல்ல ஏற்பாடு

மதுரை மாவட்டம், பேரையூர் காடனேரியை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி செல்வராஜ், சிறுநீரகம் செயலிழந்த நிலையில் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு, பெங்களூரில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி கிடைத்தும், அங்கு செல்ல பண வசதி இன்றி தவித்து வந்துள்ளார். இதுதொடர்பாக, செல்வராஜின் மனைவி, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க, அவர் உடனடியாக ஆம்புலன்ஸ் வசதியை ஏற்பாடு செய்து கொடுத்து, சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

வளையல் அலங்காரத்தில் அருள்பாலித்த ஸ்ரீகருக்காத்தம்மன் - சமூக இடைவெளியுடன் அம்மனை தரிசித்த பெண்கள்

செங்கல்பட்டு மாவட்டம். மாமல்லபுரத்தில் உள்ள ஸ்ரீகருக்காத்தம்மன் கோயிலில் ஆடிப்பூரம் விழாவை முன்னிட்டு  அம்மனுக்கு 5 ஆயிரம் வளையல் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது. கோயிலுக்கு வந்த பெண்கள் சமூக இடைவெளியுடன் சென்று அம்மனை தரிசித்தனர். கோயில் முகப்பு வாயிலில் 1 மீட்டர் இடைவெளி தூரத்தில் முக கவசம் அணிந்த பெண்கள் மட்டுமே பொங்கல் வைக்க அனுமதிக்கப்பட்டனர். 

ஆடிப்பூரம் மற்றும் இரண்டாம் ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு - அனுமதி மறுப்பு - பக்தர்கள் ஏமாற்றம்

கும்பகோணம் பகுதியில் உள்ள ஏழுலோக நாயகி அம்மன், நாகேஸ்வரர் கோவில்களில், ஆடி இரண்டாவது வெள்ளி மற்றும் ஆடிப்பூர விழா கொண்டாடப்பட்டது. அம்மனுக்கும் சிறப்பு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. கொரோனா ஊரடங்கால், பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதுடன், கடந்தாண்டு போல், விழா சிறப்பாக நடைபெறாததால், பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்