சாலை விபத்தில் கவிழ்ந்த முட்டை ஏற்றிச்சென்ற ஆட்டோ - உடைந்த முட்டைகளை கையால் அள்ளி அகற்றிய தலைமை பெண் காவலர்
மதுரையில் சாலை விபத்தில் விழுந்து உடைந்த முட்டையால் நடக்க இருந்த விபத்தை தடுக்க உடைந்த முட்டை கழிவுகளை பெண் போக்குவரத்து தலைமை காவலர் தனது கைகளால் அள்ளி அகற்றினார்.
மதுரையில் சாலை விபத்தில் விழுந்து உடைந்த முட்டையால் நடக்க இருந்த விபத்தை தடுக்க உடைந்த முட்டை கழிவுகளை,பெண் போக்குவரத்து தலைமை காவலர்,தனது கைகளால் அள்ளி அகற்றினார். தாமரை தொட்டி பகுதியில், 5000 க்கும் மேற்பட்ட முட்டைகளை ஏற்றி வந்த சரக்கு ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது 500 க்கும் மேற்பட்ட முட்டைகள் உடைந்து சாலையில் ஓடியது. இதனால் அவ்வழியே வந்த இருசக்கர வாகனங்கள் விபத்திற்கு உள்ளாகும் சூழல் ஏற்பட்டதால், அதை தலைமை காவலராக மீனா,தனது கைகளால் அள்ளி அகற்றினர்.
"ஈரோட்டில் 25,000 பேர் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்"- மாவட்ட ஆட்சியர் கதிரவன் தகவல்

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, 140 இடங்களில், 25,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக என மாவட்ட ஆட்சியர் கதிரவன் தெரிவித்துள்ளார். நேற்று 564 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் 416 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். 135 பேர் சிகிச்சையில் உள்ளதாகவும் இதுவரை 69 ஆயிரத்து 293 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் கதிரவன் தெரிவித்துள்ளார்.
"திருவனந்தபுரம் கவுன்சிலர்கள் 7 பேருக்கு கொரோனா" - தனிமைப்படுத்தி கொண்ட திருவனந்தபுரம் மேயர்

கேரளாவில் திருவனந்தபுரம் மாநகராட்சியில் உள்ள 7 கவுன்சிலர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதை தொடர்ந்து மேயர் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். அங்கு பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், வருகிற 27ந்தேதி நடைபெற இருந்த சட்டசபை கூட்டத்தொடரை ரத்து செய்வது என அமைச்சரவை முடிவு செய்துள்ளது. வரும் திங்கட்கிழமை சிறப்பு அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என்றும், இதில், கேரளாவில் முழு ஊரடங்கை அமல்படுத்துவது பற்றி முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
"கேரளாவில் புதிதாக 885 பேருக்கு கொரோனா தொற்று உறுதி" - முதலமைச்சர் பினராயி விஜயன் தகவல்

கேரளாவில் வெள்ளிக்கிழமையன்று புதிதாக மேலும் 885 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 16 ஆயிரத்து 995 ஆக உயர்ந்துள்ளதாக, முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கேரளாவில் கொரோனாவால் இதுவரை 54 பேர் உயிரிழந்ததாகவும், ஒரே நாளில் 968 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் கூறியுள்ளார். 9 ஆயிரத்து 371 பேர் சிகிச்சையில் உள்ளதாகவும், நோய் தீவிரமுள்ள பகுதியான ஹாட்ஸ் பாட் எண்ணிக்கை 453 ஆக உயர்ந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
வனப்பகுதிகளில் நடந்தே சென்று பணியாற்றிய தபால் ஊழியர் - ரூ.1 லட்சம் பரிசு வழங்கி கவுரவித்த எம்.பி.

நிலகிரி மாவட்டம் குன்னூர் வனப்பகுதிகள் வழியே நடந்தே சென்று தபால் பட்டுவாடா செய்த தபால் ஊழியருக்கு மாநிலங்களவை உறுப்பினர், ராஜீவ்சந்திர சேகர் 1 லட்ச ரூபாய் பரிசு வழங்கி கவுரவித்துள்ளார். நீலகிரி ஹில்குரோவ் தபால் நிலையத்தில் 20 ஆண்டுகள் கிராம தபால்காரராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் சிவன். இவரின் சேவை குறித்து அறிந்த கர்நாடக மாநில எம்பியான ராஜீவ் சந்திரசேகர் தபால் ஊழியர் சிவனின் வங்கிக் கணக்கில் ஒரு லட்ச ரூபாயை செலுத்தியுள்ளார்.
Next Story

