கேரளா: தங்க கடத்தல் வழக்கு - தீவிர விசாரணை

கேரளாவில் தங்க கடத்தல் வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறது.
கேரளா:  தங்க கடத்தல் வழக்கு - தீவிர விசாரணை
x
கேரளாவில் தங்க கடத்தல் வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறது.  இந்த வழக்கில் கைதாகி உள்ள ரமீஸ் கொடுத்த வாக்கு மூலத்தின் மூலம், கடத்தப்பட்ட தங்கம் திருச்சியில் உள்ள பிரபல நகைக்கடை மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள சங்கிலி எனும் பகுதிக்கும் விற்கப்பட்டது தெரிய வந்தது. இந்நிலையில், திருச்சி நகை கடையில் சோதனை நடத்தவும், நகை கடை உரிமையாளருக்கு சம்மன் அனுப்பவும், என்.ஐ.ஏ அதிகாரிகள் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.  இதனிடையே ,  சுவப்னா சுரேஷின் வங்கி லாக்கரில் இருந்து 1 கோடி ரூபாயும், ஒரு கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டதாக என்ஐஏ அதிகாரிகள் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்