ஆக்சிஜன் வசதி - கூடுதலாக ரூ. 76.50 கோடி ஒதுக்கீடு

தமிழகம் முழுவதும் தாலுகா மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதிகளை மேம்படுத்த கூடுதலாக ரூ. 76 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
x
தமிழகம் முழுவதும் தாலுகா மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதிகளை மேம்படுத்த கூடுதலாக ரூ. 76 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தடுப்பு மற்றும் மேலாண்மை பணிகளுக்காக கூடுதலாக 76 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக்சிஜன் வசதிகளை மேம்படுத்தவும் மருத்துவமனை கட்டடங்கள், மின்சாரம் சார்ந்த பணிகளை மேம்படுத்தவும் இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் குழாய்களை அமைக்க ஏற்கெனவே 75 கோடியே 28 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்