ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சீட்டு விளையாட்டுகள் - தடை செய்வதற்கு மத்திய, மாநில அரசுக்கு நீதிபதி பரிந்துரை

இந்திய முழுவதும் online rummy விளையாட்டுக்கு தடை விதிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைகிளை நீதிபதி புகழேந்தி தெரிவித்துள்ளார்.
ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சீட்டு விளையாட்டுகள் - தடை செய்வதற்கு மத்திய, மாநில அரசுக்கு நீதிபதி பரிந்துரை
x
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் சேர்ந்த சிலுவை என்பவர் தாக்கல் செய்த மனுவில்,  தனியார் தோட்டத்தில் சீட்டு விளையாடிய  தன் மீதும், நண்பர்கள் மீதும் கூடங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், பொது இடத்தில் சீட்டு விளையாடினால் தான் வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி புகழேந்தி,  தற்போது ஆன்லைன் மூலம் ரம்மி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகள் பணத்தை மையமாக வைத்து நடைபெறுகிறது என்றும், இது  வேலையில்லா இளைஞர்களின் நேரத்தையும், சிந்திக்கும் திறனையும்  கெடுக்கிறது என்றும் தெரிவித்தார். எனவே, ஆன்லைன்சீட்டு விளையாட்டுகளை  தடை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி, வழக்கை நீதிபதி முடித்து வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்