வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட விவகாரம்: கோட்டாட்சியர் முன் எஸ்.ஐ. உள்ளிட்ட 5 பேர் விளக்கம்

புதுக்கோட்டையில் முன் அனுமதி ஏதுமின்றி துப்பாக்கி சூடு நடத்தியது உண்மைதான் என காவல் உதவி ஆய்வாளர் விளக்கம் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட விவகாரம்: கோட்டாட்சியர் முன் எஸ்.ஐ. உள்ளிட்ட 5 பேர் விளக்கம்
x
புதுக்கோட்டை மாவட்டம் போச்சம்பள்ளியில் கடந்த 3 தினங்களுக்கு முன், இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. அங்கு சென்ற காவல் உதவி ஆய்வாளர் சரவணன் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மோதலைக் கட்டுக்குள் கொண்டுவந்தார். 100க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், 25 பேர் கைது செய்யப்பட்டனர். இதனிடையே, துப்பாக்கிச் சூடு நடத்தியது குறித்து விசாரித்து அறிக்கை அளிக்குமாறு கோட்டாட்சியருக்கு, மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி உத்தரவிட்டார். இதுகுறித்து காவல் உதவி ஆய்வாளர் சரவணன் உள்ளிட்ட 5 பேரிடம் விசாரிக்கப்பட்டது. அப்போது, தாம் எந்தவித முன் அனுமதியும் பெறவில்லை என்றும், கடுமையான மோதலை தடுக்க, வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்