அரசு மதுபானக் கடையில் கைவரிசை காட்டிய கொள்ளை - சுவற்றில் துளையிட்டு சென்று மதுபானங்களை திருடியது அம்பலம்
பதிவு : ஜூலை 23, 2020, 04:42 PM
விழுப்புரம் அருகே போதும் என்ற மனத்துடன் கொள்ளையன் ஒருவர் தனக்கு தேவையான விலை உயர்ந்த மதுபானங்களை மட்டுமே எடுத்துச் சென்ற விநோத சம்பவம் நடந்துள்ளது.
விழுப்புரம் அருகே போதும் என்ற மனத்துடன் கொள்ளையன் ஒருவர் தனக்கு தேவையான விலை உயர்ந்த மதுபானங்களை மட்டுமே எடுத்துச் சென்ற விநோத சம்பவம் நடந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே வடதரம் பகுதியில் விவசாயம் நிலத்திற்கு நடுவே அரசு மதுபானக்கடை ஒன்று உள்ளது. புதிதாக செயல்பட்டு வரும் அந்த கடையில் ஏராளமான மதுபாட்டில்கள் வைக்கப்பட்டிருந்தன. இதனிடையே சுவற்றில் துளையிட்டு கடையின் உள்ளே சென்ற மர்மநபர், அங்கிருந்த மதுபானங்களை பார்த்த பிறகும் நின்று நிதானமாகவே தன் கைவரிசையை காட்டியுள்ளார். கடையின் உள்ளே சுமார் 14 லட்ச ரூபாய்க்கும் அதிகமான மதுபாட்டில்கள் இருந்த போதிலும் தனக்கு தேவையான பாட்டில்களை தேடித் தேடி எடுத்துள்ளார் அந்த பலே கொள்ளையன்... 

காஸ்ட்லி சரக்கு என்பது மட்டுமே அவரது கவனமாக இருந்த நிலையில் குறிப்பிட்ட சில பாட்டில்களை மட்டுமே எடுத்துச் சென்றார் அவர். இதன் மட்டும் வெறுமனே 25 ஆயிரம் ரூபாய் மட்டுமே. பிராந்தி, விஸ்கி, ரம், பீர் என ஒவ்வொன்றிலும் ரகம் ரகமாக வெரைட்டியாக திருடிச் சென்றிருக்கிறார் அந்த நபர். கடையை திறக்க வந்தவர்கள் சுவற்றின் துளையை பார்த்து அதிர்ந்து போய் உள்ளே பார்த்தால் குறிப்பிட்ட சில பொருட்கள் மட்டுமே திருட்டு போயிருப்பதை அறிந்து நிம்மதி பெருமூச்சு விட்டனர். இதுஒரு புறம் என்றால் விவசாய நிலத்திற்கு நடுவே உள்ள இந்த கடையை அகற்றக்கோரி மக்கள் போராட்டம் நடத்திய நிலையில் கடை அகற்றப்படும் என உறுதியளிக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த சூழலில் தான் கடையில் இந்த கொள்ளை சம்பவம் அரங்கேறியிருக்கிறது. திருட்டு சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்ட நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.

408 views

கொரோனா தடுப்பு மருந்து - மூன்றாம் நிலை மனித பரிசோதனை இன்று தொடங்குகிறது

கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு ஆராய்ச்சி மையங்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளன.

391 views

மகிந்த ராஜபக்சவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து - தேர்தலை திறம்பட நடத்தியதற்கு பாராட்டு

தேர்தலை வெற்றிகரமாக நடத்தியதற்கு, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு, பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

106 views

பிற செய்திகள்

700 லிட்டர் டீசல் திருடிய இருவர் கைது

சென்னை தண்டையார்பேட்டையில் டேங்கர் லாரியில் இருந்து 700 லிட்டர் டீசல் திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

6 views

பூஜிக்கப்பட்ட வேலுடன் பாஜகவினர் ஊர்வலம் - குமரமலை முருகன் கோயிலில் ஒப்படைப்பு

புதுக்கோட்டை பாஜக சார்பில் பூஜிக்கப்பட்ட வேல் மற்றும் புனித நீர் கலசங்கள் ஊர்வலமாக குமரமலை முருகன் கோயிலுக்கு எடுத்து செல்லப்பட்டன.

13 views

வசந்தகுமார் எம்.பி.க்கு கொரோனா தொற்று உறுதி - அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி

கன்னியாகுமரி எம்.பி. வசந்தகுமாருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

10 views

படிக்கட்டில் அமர்ந்து மனுக்கள் வாங்கிய ஆட்சியர் - ஆட்சியரை பாராட்டி சென்ற பொதுமக்கள்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, அங்கிருந்த படிக்கட்டில் அமர்ந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

6 views

"ரயில்வே துறையில் வட மாநிலத்தவர் அதிகம் சேருவதை தடுக்க வேண்டும்" - முதலமைச்சருக்கு எஸ்.ஆர்.எம்.யூ வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் ரயில்வே துறையில் வட மாநிலத்தவர் அதிகம் சேருவதை தமிழக முதலமைச்சர் தான் தடுக்க வேண்டும் என்று, எஸ்.ஆர்.எம்.யூ வலியுறுத்தியுள்ளது.

12 views

சானிடைசர்கள் வைக்க அனுமதி தேவையில்லை - ஜூலை 27ஆம் தேதி முதல் அமலில் உள்ளது

சானிடைசர்கள் விற்பனை மற்றும் இருப்பு வைக்க உரிமம் பெறத் தேவையில்லை என மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

53 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.