2 குழந்தைகளை கழுத்தை நெறித்து கொன்ற தந்தை - எய்ட்ஸ் பயத்தால் கொலை செய்ததாக தகவல்
பதிவு : ஜூலை 23, 2020, 01:50 PM
தவறான உறவால் எய்ட்ஸ் நோய் இருக்குமோ என்ற அச்சத்தில் தன் பிள்ளைகளை பெற்ற தந்தையே கொடூரமாக கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் காளிராஜ். இவர் திருத்தங்கலில் அரசு கால்நடை மருத்துவமனையில் கால்நடை ஆய்வாளர் பயிற்சியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரின் மனைவி தங்க புஷ்பம். பட்டாசு தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். 

கடந்த 2013ல் காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு 5 மற்றும் 3 வயதில் 2 பிள்ளைகள். ஒரு ஆண் குழந்தை, ஒரு பெண் குழந்தை என மகிழ்ச்சியாக சென்று  கொண்டிருந்தது இவர்களின் வாழ்க்கை. இதனிடையே கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக காளிராஜூக்கு ஒரு பெண்ணுடன் தவறான பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

இருவரும் நெருங்கிப் பழகியதால் தனக்கு எய்ட்ஸ் நோய் இருக்குமோ என அச்சத்தில் இருந்துள்ளார் காளிராஜ். இதையடுத்து தன் மனைவி, பிள்ளைகளுடன் சென்று மருத்துவமனையில் சோதனை செய்து கொண்டார். பரிசோதனை முடிவில் எய்ட்ஸ் இல்லை என வந்தாலும் கூட, காளிராஜ் நிம்மதி அடையவில்லை. 

செல்போனில் பல தகவல்களை தேடி தேடி ஆராய்ந்து தனக்கு நோய் இருப்பதாக தானே நினைத்துக் கொண்டு மன உளைச்சலில் தவித்து வந்தார் காளிராஜ். இதன் காரணமாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. 

ஊரடங்கால் வேலைக்கு போகாமலும் இருந்ததால் மன உளைச்சலில் இருந்த காளிராஜ், தன் பிள்ளைகள் 2 பேரையும் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். வேலைக்கு சென்று விட்டு திரும்பிய தங்க புஷ்பம், தன் பிள்ளைகள் உயிரிழந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். மனைவியை பார்த்த உடனே கடப்பாறையை எடுத்துக் கொண்டு வெறி பிடித்தவர் போல ஓடி வந்துள்ளார் காளிராஜ். 

தனக்கு எய்ட்ஸ் இருப்பதால் நோய் வந்து சாவதற்கு முன்பாக இப்போது சேர்ந்து சாகலாம் வா என கூறியபடி அவர் ஓடிவந்ததை பார்த்து தங்க புஷ்பம் அலறியுள்ளார். இதைப் பார்த்து அருகில் இருந்தவர்கள் ஓடி வரவும் காளிராஜ் தப்பி ஓடினார். 

பின்னர் குழந்தைகளின் சடலங்கள் மீட்கப்பட்டது. தப்பி ஓடிய காளிராஜை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். போலீசாரிடமும் தனக்கு எய்ட்ஸ் இருப்பதாக கூறிக் கொண்டே இருந்துள்ளார் காளிராஜ். நோய் இல்லை என முடிவுகள் வந்தாலும் கூட, தேவையற்ற மன குழப்பத்தால் 2 பிஞ்சுகளின் உயிர் பறிபோனது பரிதாபத்தின் உச்சம்.... 

தொடர்புடைய செய்திகள்

பள்ளத்தாக்கு பகுதியில் கிரிக்கெட் - பரவும் வீடியோ

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆரோன் பிஞ்ச், டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

214 views

மறைந்த ஹாலிவுட் நடிகர் போஸ்மேன்-க்கு அஞ்சலி - படம் திரையிடப்பட்டு விம்மி அழுத ரசிகர்கள்

மறைந்த ஹாலிவுட் நடிகர் போஸ்மேனின் படத்தை ஒளிபரப்பிய ரசிகர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

43 views

(02.09.2020) உலக செய்திகள்

(02.09.2020) உலக செய்திகள்

36 views

கர்நாடக பாஜக எம்பி, கொரோனாவுக்கு பலி

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த கர்நாடக மாநில பாஜக எம்.பி. அசோக் கஸ்டி உயிரிழந்தார்.

25 views

பிற செய்திகள்

முன்பதிவு அல்லாத ரயில் பெட்டிகளை ஏசி பெட்டிகளாக மாற்றும் விவகாரம்: "சாமானிய மக்களுக்கு பாதிப்பு" - எஸ்.ஆர்.எம்.யூ எதிர்ப்பு

இந்திய ரயில்வேயை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எஸ்.ஆர்.எம்.யூ. கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

8 views

"கொரோனா பாதிப்பு 10 சதவீதம் குறைந்துள்ளது" - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு 10 சதவீதம் குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

124 views

செயின் பறிக்க சிறுவனுக்கு பயிற்சி.... காட்டிக்கொடுத்த கேமரா..

சென்னையில் செயின் பறிக்க சிறுவனுக்கு பயிற்சி கொடுத்து திருட்டில் ஈடுபடுத்திய சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

9 views

சிலை கடத்தல் வழக்கு- புதிய திருப்பம்

காணாமல் போன சிலை கடத்தல் வழக்கு ஆவணங்கள் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற அதிகாரியை நியமிக்க வேண்டியதில்லை என்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

76 views

கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பேடிஎம் நீக்கம் - பயனாளர்கள் செயலியை தொடர்ந்து பயன்படுத்தலாம் - பேடிஎம்

கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பேடிஎம் செயலி நீக்கப்பட்டுள்ளதால் அதன் பயனாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

126 views

ஊராட்சி மன்ற அலுவலக விவகாரம் - அதிமுக பிரமுகரை கண்டித்து உண்ணாவிரதம்

திருவாரூரை அடுத்த முகந்தனூரில் 300-க்கும் மேற்பட்ட மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

5 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.