கந்த சஷ்டி கவசம் விவகாரம்: "சரியான நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு நன்றி" - "சரியான நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு நன்றி"
பதிவு : ஜூலை 22, 2020, 08:41 PM
கந்த சஷ்டி கவசத்தை அவதூறாக சித்தரித்த விவகாரத்தில் சரியான நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு நடிகர் ரஜினி நன்றி தெரிவித்துள்ளார்.
கந்த சஷ்டி கவசத்தை அவதூறாக சித்தரித்த விவகாரத்தில் சரியான நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு நடிகர் ரஜினி நன்றி தெரிவித்துள்ளார்.  இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ளது. அறுபடை வீடுகளை கொண்ட சுவாமி முருகனை போற்றும் பக்திக் கவசமான கந்த சஷ்டி கவசத்தை கடுமையாக விமர்சித்து கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனலில், வீடியோ வெளியிடப்பட்டது. இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து, சென்னையில் உள்ள கறுப்பர் கூட்ட அலுவலகத்தில் சோதனை நடத்திய போலீஸார், அலுவலகத்திற்கு சீல் வைத்தனர். மேலும், கறுப்பர் கூட்டத்தின் சுரேந்திரன், செந்தில்வாசன், சோமசுந்தரம், குகன் உள்ளிட்டோரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். 
கறுப்பர் கூட்டம் சேனலில் 500க்கும் மேற்பட் வீடியோக்களை சைபர் கிரைம் போலீஸார் நீக்கினர். மேலும், அந்த சேனலை முடக்கவும் யூடியூப் நிறுவனத்திற்கு பரிந்துரை செய்துள்ளனர். இந்நிலையில், கறுப்பர் கூட்டத்தின் செயலைக் கண்டிக்கும் வகையில், நடிகர் ரஜினி, ட்விட்டரில் தமது கருத்தை பதிவு செய்துள்ளார். கந்தனுக்கு அரோகரா... என்ற ஹேஸ்டேக் மூலம், கந்த சஷ்டி கவசத்தை மிகக் கேவலமாக அவதூறு செய்து பல கோடி தமிழ் மக்களை புண்படுத்தி கொந்தளிக்க செய்து விட்டனர் எனக் குறிப்பிட்டுள்ளார். 

வாழ்க்கையில் மறக்க முடியாத அளவிற்கு ஈனச் செயலை செய்தவர்கள் மீது தமிழக அரசு துரித நடவடிக்கை எடுத்ததற்கு நன்றி என்றும், அதில்  ரஜினி பதிவிட்டுள்ளார். சம்பந்தப்பட்ட வீடியோக்களை அரசு தலையிட்டு நீக்கியதற்கு மனமார்ந்த பாராட்டுக்கள் தெரிவித்துள்ள ரஜினி, மத துவேசமும், கடவுள் நிந்தனையும் ஒழியட்டும்... ஓழியணும்... என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக தந்தி தொலைக்காட்சியில் தொலைபேசி மூலம் கருத்து தெரிவித்த அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைசெல்வன், ரஜினிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.அதேநேரம், இதுதொடர்பாக கருத்து தெரிவித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை செயலாளர் வன்னியரசு, ரஜினியை சாடியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.

223 views

கனமழை : பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்ட பொதுமக்கள்

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் எமரால்டு உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

215 views

பிற செய்திகள்

"ஆறுதல் கூற யாரும் நேரில் வர வேண்டாம்" - திருமாவளவன் வேண்டுகோள்

தனது சகோதரி பானுமதியின் மரணத்தால் மனவேதனையில் இருக்கும் தனக்கு ஆறுதல் கூற யாரும் நேரில் வரவேண்டாம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.

1784 views

"சமூக நீதிக்காக களத்தில் நின்று போராடியவர் கருணாநிதி" - இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொது செயலாளர் டி.ராஜா

சமூக நீதிக்காக களத்தில் நின்று போராடியவர் கருணாநிதி என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொது செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.

99 views

வேல் பூஜை செய்யக்கோரி சுவரொட்டி ஒட்டிய பாஜகவினர் - போலீசார் தடுத்து நிறுத்தியதால் சாலை மறியல்

வருகின்ற ஆகஸ்ட் 9 ஆம் தேதி பொதுமக்கள் அவரவர் வீடுகளில் வேல் பூஜை செய்யக்கோரி ஈரோட்டில் பாஜகவினர் சுவரொட்டிகளை நேற்று இரவு ஒட்டினர்.

681 views

கொரோனா நிவாரணம் ?- ஸ்டாலின் கேள்வி

கொரோனா தடுப்புப் பணியில் உயிரிழக்கும் முன் களப் பணியாளர்களின் குடும்பத்திற்கு அறிவிக்கப்பட்ட நிவாரணத்தை, முதலமைச்சர் உடனடியாக வழங்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

31 views

மகேந்திரன் மரணம் - நீதிமன்றம் சரமாரி கேள்வி

சாத்தான்குளத்தில் போலீசார் விசாரணையில் உயிரிழந்ததாக கூறப்படும் மகேந்திரன் மரணம் குறித்து ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை? என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.

31 views

வேலூரில் ஹவாலா பணப்பரிமாற்றமா? - திடீரென நடந்த சோதனையால் பரபரப்பு

ஹவாலா பணப்பரிமாற்றம் நடந்ததாக எழுந்த புகாரின் பேரில் வேலூரில் ஒருங்கிணைந்த குற்றங்கள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர்

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.