கொல்கத்தாவில் இருந்து மதுரைக்கு குரங்கு, பறவைகள் கடத்தல் - 4 பேருக்கு தலா ரூ.25,000 அபராதம் விதித்த வனத்துறை

கொல்கத்தாவின் ஹவுராவில் இருந்து சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு பார்சல் ரெயில் வந்தது.
கொல்கத்தாவில் இருந்து மதுரைக்கு குரங்கு, பறவைகள் கடத்தல் - 4 பேருக்கு தலா ரூ.25,000 அபராதம் விதித்த வனத்துறை
x
கொல்கத்தாவின் ஹவுராவில் இருந்து சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு பார்சல் ரெயில் வந்தது. இந்தப் பார்சல்களை ரயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை செய்தபோது, அதில் 500 ஜோடி பறவைகள் மற்றும் 2 குறில் வகை குரங்குகள் கூண்டில் அடைக்கப்பட்டு எடுத்துவரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக மதுரையைச் சேர்ந்த ஆசிப் , ரியாஸ் மற்றும் சென்னையைச் சேர்ந்த பரத் அவரது நண்பர் ஆகிய நான்கு பேருக்கு தலா 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பறவைகள் மற்றும் குரங்குகள் கிண்டி குழந்தைகள் பூங்கா மற்றும் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

Next Story

மேலும் செய்திகள்