கந்த சஷ்டி கவசம் விவகாரம்: "சரியான நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு நன்றி" - நடிகர் ரஜினி
கந்த சஷ்டி கவச விவகாரத்தில் சரியான நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு நன்றி என, நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் கந்தனுக்கு அரோகரா... என்ற ஹேஸ்டேக் மூலம், கந்த சஷ்டி கவசத்தை மிகக் கேவலமாக அவதூறு செய்து பல கோடி தமிழ் மக்களை புண்படுத்தி கொந்தளிக்க செய்து விட்டனர் எனக் குறிப்பிட்டுள்ளார். வாழ்க்கையில் மறக்க முடியாத அளவிற்கு ஈனச் செயலை செய்தவர்கள் மீது தமிழக அரசு துரித நடவடிக்கை எடுத்ததற்கு நன்றி என்றும் ரஜினி பதிவிட்டுள்ளார். சம்பந்தப்பட்ட வீடியோக்களை அரசு தலையிட்டு நீக்கியதற்கு மனமார்ந்த பாராட்டுக்கள் என்றும், மத துவேசமும், கடவுள் நிந்தனையும் ஒழியட்டும்... ஓழியணும்... என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Next Story
