மலைவாழ் பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் - தட்டிக்கேட்ட நபருக்கு கத்திக்குத்து

கோவையில், மலைவாழ் பெண்ணை பாலியல் ரீதியாக, துன்புறுத்தியதை கண்டித்த நபரை கத்தியால் குத்தியவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மலைவாழ் பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் - தட்டிக்கேட்ட நபருக்கு கத்திக்குத்து
x
கோவை மாவட்டம் பட்டியார்பதி என்ற மலைவாழ் கிராமத்திற்கு சென்ற ராமசாமி என்பவர், அங்கு உறங்கிக் கொண்டிருந்தவரின் மனைவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். அப்போது, 
24 வயதுள்ள அந்தப் பெண் சப்தமிட அருகிலிருந்தவர்கள் ராமசாமியை பிடித்து அடித்து உதைத்து எச்சரித்து அனுப்பியுள்ளனர். இந்நிலையில் தோட்டத்து உரிமையாளரிடம், இது குறித்து அந்த பெண்ணின் கணவர் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, தோட்டத்து உரிமையாளர் கார்த்திக் என்பவர்,ராமசாமியை கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த ராமசாமி, கத்தியால், கார்த்திக்கை தாக்கி விட்டு தப்பியோடியுள்ளார். இச்சம்பவம் பற்றி வழக்கு பதிவு செய்த ஆலாந்துறை காவல் துறையினர் கொலை முயற்சி, பாலியல் கொடுமை, எஸ் சி , எஸ் டி வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து ராமசமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்