சிறுமியிடம் சில்மிஷம் - போக்‌சோவில் முதியவர் கைது

சிறுமியிடம் சில்மிஷம் செய்த முதியவர் கைது செய்யப்பட்டார். திருவிடை மருதூர் அடுத்த கொளுத்தியூர் கிராமத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமியை, அவரது தாத்தாவின் நண்பர் பன்னீர், சில்மிஷம் செய்துள்ளார்.
சிறுமியிடம் சில்மிஷம் - போக்‌சோவில் முதியவர் கைது
x

சிறுமியிடம் சில்மிஷம் செய்த முதியவர் கைது செய்யப்பட்டார். திருவிடை மருதூர் அடுத்த கொளுத்தியூர் கிராமத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமியை, அவரது தாத்தாவின் நண்பர் பன்னீர், சில்மிஷம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில், பந்தநல்லூர் போலீசார், பன்னீரை கைதுசெய்து போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். 

சமூக வலை தளத்தில் மோதல் - காவல்நிலையத்தில் முற்றுகை 


ஒருதலைப்பட்சமாக போலீசார் நடப்பதாக கூறி, சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. கோவை, அன்னூர் பகுதியைச் சேர்ந்த சண்முகநாதன், முகநூல் பக்கத்தில் அவதூறான கருத்துக்களை பதிவிட்டதாக, போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர், நந்தா என்பவரும் அவதூறு கருத்தை பரப்பியதாகவும், அவர் மீதும் வழக்குப் பதிவு செய்யக்கோரி, முற்றுகையிட்டனர். பேச்சுவார்த்தைக்குப் பின்னர், நந்தா மீதும் போலீசார் வழக்கு பதிந்தனர். 

திருட்டுத்தனமாக விற்பனை செய்யப்படும் கர்நாடக மதுபாட்டில்கள் 


ஒசூர் சின்னஎலசகிரி பகுதியில் ஒரு வீட்டில் கர்நாடக மதுபாட்டில்களை கடத்தி வந்து சிலர் திருட்டுத்தனமாக விற்பனை செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான போலீசார், இதனை தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தகாத உறவால் ஒரே குடும்பத்திற்குள் தகராறு - ஒருவர் கொலை



ஒரே குடும்பத்தில் பெண் எடுத்த இருவரிடையே ஏற்பட்ட தகராறில், ஒருவர் கொல்லப்பட்டார். தூத்துக்குடி மாவட்டம்,  கே.டி.சி. நகரை சேர்ந்த பிரேம்குமார், விக்னேஷ்வரன் ஆகிய இருவரும், ஒரே குடும்பத்தில் பெண் எடுத்திருந்தனர். இதில், பிரேம்குமாருக்கு, விக்னேஷ்வரன் மனைவியுடன் தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட தகராறில், விக்னேஸ்வரன் மற்றும் அவரது உறவினர்கள் வெட்டியதில், பிரேம்குமார் உயிரிழந்தார். கொலை நடந்த இடத்திற்கு நேரில் வந்த மாவட்ட எஸ்.பி.ஜெயக்குமார் குற்றவாளிகளை கைது செய்ய உத்தரவிட்டார்.

குளத்தில் மணல் எடுக்க எதிர்ப்பு - போராட்டம்



விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள குளத்தில் பூங்கா அமைக்கும் பணிக்காக எடுக்கப்படும் மணல், கடத்தப்படுவதாக கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பணியில் ஈடுபட்டிருந்த வாகனங்களை சிறை பிடித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தெரு நாய் கடித்த‌தில் 15 பேர் காயம்



திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே தெரு நாய் ஒன்று 15க்கும் மேற்பட்டோரை கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. வளநாடு பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்த 15 பேரும், நாய்கடிக்கான தடுப்பூசி போட வேன் பிடித்து மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு வந்தனர். நாய்களை பிடிக்க உள்ளாட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்களை அச்சுறுத்தும் காட்டுயானை



ஊட்டியில் கிராம மக்களை அச்சுறுத்திவந்த யானையை வனத்துறையினர் மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டினர்.  மாவநல்லா பகுதியில் காட்டு யானை ஒன்று வாழை மற்றும் பீன்ஸ் தோட்டங்களை சேதப்படுத்தி வந்த‌து. மேலும் பொதுமக்களையும் அச்சுறுத்தியதால் வனத்துறையினர் யானையை மீண்டும் காட்டுக்குள் விரட்டினர்.

ஆடி முளைக்கொட்டு விழா கொடியேற்றம்



மதுரை மீனாட்சியம்மன் கோவில் ஆடி முளைக் கொட்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான ஆடிப்பூரம் வரும் 24ம் தேதி நடைபெறுகிறது. முளைக் கொட்டு விழாவையொட்டி வரும் 30ம் தேதி வரை இரண்டாம் பிரகாரத்தில் சாமி புறப்பாடு நடைபெறும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆட்சியர் அலுவலத்திற்குள் புகுந்த ஆமை



திருப்பூரில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள குட்டைகளில் அதிக அளவு தண்ணீர் தேங்கியுள்ளது. இந்நிலையில் குட்டைகளிலிருந்து ஆமை ஒன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் புகுந்த‌து. ஆமையை மீட்ட அலுவலக ஊழியர்கள்  பத்திரமாக வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.


4 ஆண்டுகளில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்கள் அழிப்பு - மாவட்ட நீதிபதி முன்னிலையில் ஆற்றில் கொட்டப்பட்டது 


விழுப்புரம் மாவட்டத்தில்,  கடந்த 4 ஆண்டுகளாக பறிமுதல் செய்யப்பட்டிருந்த மதுபாட்டில்கள் ஆற்றில் ஒட்டி அழிக்கப்பட்டன.   2017 ம் ஆண்டு  முதல் 2020 ஆம் ஆண்டு வரை புதுச்சேரி மாநிலத்தில் இருந்து மது பாட்டில்களை கடத்தல் உள்ளிட்ட  வழக்குகளில்  சுமார் 5 லட்ச ரூபாய் மதிப்பிலான 9 ஆயிரத்து 699 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.  அவற்றை ஒரே நேரத்தில் கொட்டி அளிக்க முடிவு செய்து, விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற மதுவிலக்கு அமல்பிரிவு நீதிபதி அருண்குமார் மற்றும் மது விலக்கு காவல் ஆய்வாளர் ரேணுகாதேவி முன்னிலையில் தென்பெண்ணை  ஆற்றில் திறந்து விட்டு  அழித்தனர்.


கூட்டுக் குடும்பத்தை பிரித்த கொரோனா - ஒரே குடும்பத்தில் 9 பேருக்கு பாதிப்பு



ஒரே குடும்பத்தில் 9 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, கூட்டுக் குடும்ப உறுப்பினர்களை பிரித்து வைத்துள்ளது. 
கும்பகோணம் பெருமாண்டி  ஊராட்சியில் உள்ள மருதமுத்து நகரில் வசிக்கும் ஒருவர், தாராசுரம் காய்கறி மார்க்கெட்டில் வேலை பார்த்து வந்த நிலையில், கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வரும், இவரது குடும்பத்தில் பெற்றோர், சகோதரி, மகன், மகள் என ஒன்பது பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. அனைவரும் தஞ்சை சிகிச்சை மையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர். 


கொரோனா நோய் தொற்றால் காவலர் பலி - அரசு மரியாதையுடன் உடல் அடக்கம்


கொரோனா பாதிப்பால் உயிரிழந்த தலைமைக் காவலரின் உடல் 21 குண்டுகள் முழங்க, முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. அருப்புக்கோட்டை காவல் நிலைத்திற்குட்பட்ட நெடுஞ்சாலை ரோந்துப்பிரிவில் தலைமை காவலராக பணியாற்றிவந்த ஜெயப்பிரகாஷ், கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். ஜெயப்பிரகாஷின் உடல்  
உடல், 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் நகராட்சி மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது

Next Story

மேலும் செய்திகள்