கனமழையால் சரிந்த கூலித்தொழிலாளியின் வீடு : நான்கு பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

சேலத்தில் கடந்த மூன்று தினங்களாக மாலை நேரத்தில் கனமழை பெய்து வருகிறது.
கனமழையால் சரிந்த கூலித்தொழிலாளியின் வீடு : நான்கு பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
x
சேலத்தில் கடந்த மூன்று தினங்களாக மாலை நேரத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், பலத்த காற்றுடன் கனமழை பெய்ததில், மூனாங்கரடு பகுதியில் வசித்து வரும் கூலித்தொழிலாளி சண்முகராஜ் என்பவரின் ஓட்டு வீடு சரிந்து விழுந்தது. விபத்தை உடனடியாக அறிந்த சண்முகராஜ், மனைவி மற்றும் குழந்தைகளுடன் வீட்டில் வெளியே ஓடி வர வீடு முழுவதுமாக சரிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக 4 பேரும் உயிர் தப்பி உள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்