வேலூர் : ஏற்றுமதியும் விலையும் இன்றி வீணாகும் எலுமிச்சை பழங்கள்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் உரிய விலையின்றி இழப்பு ஏற்பட்டுள்ளதாக எலுமிச்சை விவசாயிகள் கூறியுள்ளனர்.
வேலூர் : ஏற்றுமதியும் விலையும் இன்றி வீணாகும் எலுமிச்சை பழங்கள்
x
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் உரிய விலையின்றி இழப்பு ஏற்பட்டுள்ளதாக எலுமிச்சை விவசாயிகள் கூறியுள்ளனர். கல்லாடி, கொச்சாலூர், முதலியார் ஏரி பகுதியில் சாகுபடி செய்த எலுமிச்சை பழங்கள், ஊரடங்கு எதிரொலியால், ஏற்றுமதி இன்றி முடங்கியுள்ளது. உள்ளூரிலும் உரிய விலை இல்லாததால் விவசாயிகள் தவித்துள்ளனர்.

ஊரடங்கை மீறியதாக அமமுக நிர்வாகி உள்பட 263 பேர் மீது வழக்கு



ஊரடங்கு உத்தரவை மீறியதாக முன்னாள் அமைச்சர் பழனியப்பன் உள்ளிட்ட அ.ம.மு.க.வினர் மீது, சேலம் மாவட்டம் ஆத்தூர் காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைவாசல், கெங்கவல்லி, ஏத்தாப்பூர் பகுதிகளில் சமூக இடைவெளியின்றி கட்சி ஆலோசனைக் கூட்டம் நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.

வியாபாரிகள் 27 பேர் உள்பட ஒரே நாளில் 200 பேருக்கு கொரோனா



தூத்துக்குடியில் ஒரே நாளில் 27 வியாபாரிகள் உள்ளிட்ட 200 பேருக்கு கொரோனா உறுதியானதால், பீதி ஏற்பட்டுள்ளது. வேளாண் உதவி இயக்குநர், வெளிநாட்டில் இருந்து திரும்பியவர் உள்பட 200 பேர் பாதிக்கப்பட்டனர்.

இணையத்தில் ஒளிபரப்பான மேல்மலையனூர் ஊஞ்சல் சேவை

இணையத்தில் ஒளிபரப்பான விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோயில் ஆடிமாத ஊஞ்சல் உற்சவத்தை பக்தர்கள் ஏராளமானோர் வழிபட்டனர். 

நில அபகரிப்பு செய்வதாக திமுக ஊராட்சி தலைவர் மீது புகார்

சேலம் மாவட்டம் கம்மாளப்பட்டியில், 4 ஏக்கர் விளை நிலத்தை, தி.மு.க. ஊராட்சித் தலைவர் அபகரிக்க முயல்வதாக ஆட்சியர் அலுவலகத்தில் பழனிசாமி என்ற விவசாயி புகாரளித்துள்ளார். காலி மதுப்பாட்டில் மற்றும் அரளிச் செடியுடன் ஆட்சியர் அலுவலகம் வந்து அவர் புகார்மனு அளித்தார்.

கொரோனா பரவல் எதிரொலி - 20 தெருக்களில் 50 கடைகளுக்கு சீல் 

கும்பகோணத்தில் கொரோனா பரவல் உயர்வு எதிரொலியாக, 20 தெருக்களில் உள்ள 50 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று அதிகரித்த நிலையில், காசிராமன் தெரு, கர்ணக்கொல்லை, துக்காம்பாளையம், அண்ணாநகர்  மற்றும் சோலையப்பன் தெரு கடைகளும் இதில் அடங்கும். 

சந்தனமரம் வெட்டி கடத்திய 4 பேர் - தலா ரூ. 12,500 அபராதம்



நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக பகுதியில் சந்தன மரம் வெட்டிய நால்வரை பிடித்த வனத்துறையினர், 30 கிலோ எடையுள்ள சந்தனக் கட்டைகளை பறிமுதல் செய்தனர். தலா 12 ஆயிரத்து 500 ரூபாய் வீதம் 4 பேருக்கும் 50 ஆயிரம் ரூபாய் அபாராதம் விதித்தனர். 

2013-ல் கொலை - சகோதரர்கள் மூவர் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை



விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் 2013 ஆம் ஆண்டு சின்னப்பன் என்பவரை கொலை செய்த கோவிந்தன் உள்பட நால்வருக்கு, விழுப்புரம் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது.  நால்வரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஒரே நாளில் 156 பேருக்கு கொரோனா உறுதி - ஏ.எஸ்.பி.க்கு சிகிச்சை

குமரி மாவட்டத்தில் மேலும் 156 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. குளச்சல் ஏ.எ​ஸ்.பி. உள்ளிட்டோர் ஆசாரிப்பள்ளம் முகாமில் சிகிச்சையில் உள்ளனர். தற்போது ஆயிரத்து 395 பேர் சிகிச்சையில் உள்னர். உயிரிழப்பு எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை ஆயிரத்து103 பேர் குணமடைந்துள்ளனர். 

ஆண்டாள் கோயில் கருட சேவை - 15 நிமிடத்தில் முடிந்த நிகழ்ச்சி



ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில், ஐந்து கருட சேவை உற்சாகத்துடன் நடத்தப்பட்டது. கோயில் நிர்வாகிகள் மற்றும் அர்ச்சகர்கள் மட்டும் பங்கேற்ற ஆடிப்பூர திருவிழா, 15 நிமிடத்தில் முடிந்தது. கொரோனா எதிரொலியாக பக்தர்கள் பங்கேற்கவில்லை. 

எஸ்.ஐ. உள்பட 10 பேருக்கு கொரோனா -மகளிர் காவல் நிலையம் மூடல்

காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 10 போலீசாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து, வாணியம்பாடி அனைத்து மகளிர் காவல்நிலையம் மூடப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா பாதித்த 564 பேரில், 387 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 172 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

போலி முத்திரை - டாஸ்மாக் மதுபோல் விற்பனை - போலீசார் பறிமுதல்



விழுப்புரம் அடுத்த இந்திரா நகரில் போலி டாஸ்மாக் முத்திரையுடன் விற்பனையான நூற்றுக் கணக்கான கள்ள  மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், அங்குராஜ் என்பவரை கைது செய்தனர். 

விபத்தில் ஒருவர் உயிரிழப்பு - உறவினர்கள் சாலை மறியல்



ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த உறவினர்கள், விபத்து ஏற்படுத்திய நபர்களை கைது செய்யும் முன், இறந்தவரின் உடலை எடுக்க முடியாது என சாலை மறியல் செய்தனர். ஒருமணி நேர பேச்சு வார்த்தைக்கு பின் சமாதானம் ஏற்பட்டது. 

ஆடிப்பூர பர்வத வர்த்தினி எழுந்தருளல் - 5 வாயில்களிலும் பக்தர்கள்



ஆடிப்பூரத்தை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட ராமேஸ்வரம் பர்வத வர்த்தினி அம்பாளை, கோயிலின் 5 வாயில்களிலும் நின்று, பக்தர்கள் தரிசனம் செய்தனர். முன்னதாக தங்க கொடி மரத்தில் கொடியேற்றம் செய்து விழா துவங்கியது. 

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை - கோவையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை


கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், மாலையில் சாரல் மழையாக தொடங்கி 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் சாலையில் தண்ணீர் தேங்கியது. 

கனமழை - விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி


நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவில் கனமழை பெய்தது. இதனால் கடந்த சில தினங்களாக நீடித்துவந்த வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியதால், விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

இரண்டாவது நாளாக வெளுத்து வாங்கிய மழை - குடிநீர் பிரச்சனை தீரும் என மக்கள் நம்பிக்கை


திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இரண்டாவது நாளாக பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதன் மூலம், கடந்த சில மாதமாக நீடித்துவந்த குடிநீர் பிரச்சனை தீரும் என இப்பகுதி மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

சேலத்தில் சூறைக்காற்றுடன் கனமழை



சேலம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே, மாலை நேரத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், நேற்று மாலை திடீரென கரு மேகங்கள் சூழ, சூறைக்காற்றுடன் கனமழை பெய்ய தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

கனமழை - வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி


தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான முருகமலை, கும்பக்கரை, சோத்துப்பாறை, லட்சுமிபுரம் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது. 

கனமழையில் கோட்டை சுவர் இடிந்து விழுந்ததால் மக்கள் அச்சம்



கொடைக்கானல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பியர் சோலா அருவி மற்றும் பாம்பார் அருவிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து கொட்டுகிறது. மேலும், இந்திராநகர் கீழ் குடியிருப்பு பகுதியில் உள்ள கோட்டை சுவர் இடிந்து விழுந்ததால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

3 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை



ஈரோடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 3 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. வீரப்பன்சத்திரம், சூளை, கருங்கல்பாளையம், பெருந்துறை ரோடு உள்ளிட்ட இடங்களில் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

நிலத்தடி நீர்மட்டம் உயரும் என விவசாயிகள் நம்பிக்கை

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் மாலை நேரத்தில் கனமழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால், நிலத்தடி நீர்மட்டம் உயரும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்