ஆடி அமாவாசையையொட்டி முன்னோருக்கு வழிபாடு - சென்னையில் காற்றில் பறந்த சமூக இடைவெளி
ஆடி மாதத்தில் முன்னோர்களுக்கு திதி கொடுப்பது மிகுந்த பயனளிக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.
ஆடி மாதத்தில் முன்னோர்களுக்கு திதி கொடுப்பது மிகுந்த பயனளிக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. அந்த வகையில் இன்று ஆடி மாத அமாவாசை என்பதால் காலை முதல் ஏராளமான பொதுமக்கள் சென்னையில் பல்வேறு நீர் நிலைகளில் முன்னோர்களுக்கு வழிபாடு நடத்தினர். சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் குளக்கரையில் நடைபெற்ற ஆடி அமாவாசை முன்னோர் வழிபாட்டில் ஏராளமான பொதுமக்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். கொரோனா காலம் என்பதால் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அரசு தொடர்ந்து அறிவுறுத்திய நிலையில், குளக்கரையில் நடைபெற்ற திதி நிகழ்வில் சமூக இடைவெளி பின்பற்றவில்லை என்று அங்கிருந்த சிலர் குற்றம்சாட்டினர்
Next Story

