ஆவின் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி - பால் உற்பத்தி பாதிக்காத வகையில் ஆவின் நிர்வாகம் நடவடிக்கை
மதுரை ஆவின் தலைமை அலுவலகத்தின் துணைப் பொது மேலாளர் உட்பட ஊழியர்கள் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மதுரை ஆவின் தலைமை அலுவலகத்தின் துணைப் பொது மேலாளர் உட்பட ஊழியர்கள் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இங்கு எட்டு பிரிவுகளில் 500க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர்.பால் அத்தியாவசியம் என்பதால் அனைத்து ஊழியர்களும் பணிக்கு வந்து செல்கின்றனர். இதுவரை, பண்ணை பிரிவு, நிதி பிரிவு, விற்பனை பிரிவு, உற்பத்தி பிரிவு ஊழியர்கள் மற்றும் பொது மேலாளர் என அடுத்தடுத்து ஆறு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இருப்பினும் பால் உற்பத்தி பாதிக்காத வகையில் ஆவின் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது
Next Story