பெட்ரோல் நிலையத்தில் துணிகர திருட்டு - பரிதாபப்பட்ட ஊழியருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியரை தாக்கி பணத்தை பறித்து சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியரை தாக்கி பணத்தை பறித்து சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செயல்பட்டு வரும் பெட்ரோல் டீசல் விற்பனை நிலையத்தில் இந்த துணிகர திருட்டு அரங்கேறியுள்ளது. இருசக்கரவாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர், அவரசமாக பெட்ரோல் வேண்டும் என கேட்டுள்ளார். பரிதாபப்பட்ட ஊழியர் மணி, கதவை திறந்தபோது, திடீரென தாக்கிய அந்த இளைஞர், பத்தாயிரம் ரூபாய் பணம் மற்றும் சிபியூ கருவியையும் திருடிகொண்டு இருசக்கரவாகனத்தில் தயாராக இருந்த மற்றொரு இளைஞருடன் தப்பி சென்றுள்ளார்.
Next Story

