மாநகராட்சி அதிகாரி தரக்குறைவாக பேசியதாக புகார் - வேலை நிறுத்த போராட்டத்தில் தூய்மை பணியாளர்கள்
சென்னை மாநகராட்சி வளசரவாக்கம், 11 வது மண்டலத்தில் பணிபுரியும் குப்பை அள்ளும் வாகனங்களை இயக்கும் தூய்மை பணியாளர்களை மாநகராட்சி அதிகாரி தரக்குறைவாக பேசியதாக புகார் எழுந்துள்ளது.
சென்னை மாநகராட்சி வளசரவாக்கம், 11 வது மண்டலத்தில் பணிபுரியும் குப்பை அள்ளும் வாகனங்களை இயக்கும் தூய்மை பணியாளர்களை மாநகராட்சி அதிகாரி தரக்குறைவாக பேசியதாக புகார் எழுந்துள்ளது. இதனால் ஐம்பதிற்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் மற்றும் லாரி ஓட்டுனர்கள் பணிகளை புறக்கணித்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பந்தப்பட்ட அதிகாரி மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். தூய்மைப் பணியாளர்களின் வேலை நிறுத்தத்தால் குப்பைகள் தேக்கம் அடையும் சூழல் உருவாகியுள்ளது.
Next Story

