"தனியார் மருத்துவமனைகளை திறக்காவிட்டால் நடவடிக்கை" - மதுரை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

தனியார் மருத்துவமனைகளை திறக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தனியார் மருத்துவமனைகளை திறக்காவிட்டால் நடவடிக்கை - மதுரை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
x
தனியார் மருத்துவமனைகளை திறக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்தை கடந்துள்ளது. இதனிடையே பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் திறக்கப்படாமல் உள்ளதால், சாதாரண நோய்களுக்கு கூட சிகிச்சை அளிக்க முடியாத சூழல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் வினய் மேற்கொண்ட ஆய்வில், 120 தனியார் மருத்துவமனைகள் திறக்கப்படாமல் உள்ளது தெரியவந்தது. இதையடுத்து மருத்துவமனைகளை உடனடியாக திறக்க அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்