சுடுகாட்டிற்கு பாதை அமைத்து தர கோரிக்கை

திருவண்ணாமலை மாவட்டம், வி.வி.தாங்கல் கிராமத்தில் சுடுகாட்டிற்கு பாதை அமைத்து தர கோரி கிராம மக்கள், கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுடுகாட்டிற்கு பாதை அமைத்து தர கோரிக்கை
x
திருவண்ணாமலை மாவட்டம், வி.வி.தாங்கல் கிராமத்தில்  சுடுகாட்டிற்கு பாதை அமைத்து தர கோரி கிராம மக்கள்,  கோரிக்கை விடுத்துள்ளனர். சுமார், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வரும் கிராமத்தில், கடந்த 60 ஆண்டுகளாக, உடலை விவசாய நிலத்தின் வழியாக கொண்டு செல்லும் அவலம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். எனவே, ஆக்கிரமிப்பை அகற்றி, சுடுகாட்டிற்கு பாதையை அமைத்து தர வேண்டும், மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ட்ரோன் மூலம் போலீசார் தீவிர கண்காணிப்பு - விதிகளை மீறிய நபர்கள் மீது வழக்கு பதிவு

நாமக்கல்லில் கொரோனா அதிகம் பாதித்த பகுதிகளில் போலீசார், ட்ரோன் கேமிரா மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அதன்படி, மோகனூர், எருமப்பட்டி, சேந்தமங்கலம், வேலூர் மற்றும் பரமத்தி காவல் நிலைய எல்லை பகுதிகளில், சாலையில் சுற்றித்திரிந்த நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தொற்று பரவாமல் தடுக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பபு வழங்க வேண்டுமென மாவட்ட  எஸ்.பி. சக்தி கணேசன், கேட்டுக்கொண்டார்.

காவல்துறை சார்பில் பழங்குடியின மக்களுக்கு உதவி - 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவிக்கு டிஎஸ்பி பாராட்டு


ஒசூர் அருகே இருளப்பட்டயை சேர்ந்த பழங்குடியின மக்கள் ஊரடங்கால் வேலைகள் இன்றி அவதிப்பட்டு வந்தனர். இதையடுத்து, மாவட்ட எஸ்.பி.யின் உத்தரவின்பேரில், டிஎஸ்பி சங்கீதா மற்றும் போலீசார் அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கினர். இந்த, நிகழ்ச்சியின்போது அப்பகுதியில் முதல்முறையாக 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற, மாணவியை பாராட்டிய டிஎஸ்பி சங்கீதா, மாணவியை உற்சாகப்படுத்தும் நோக்கில், அவருக்கு பண உதவி செய்ததுடன், செல்பியும் எடுத்து கொண்டார்.

கொரோனா சிகிச்சை அமைக்க எதிர்ப்பு - அதிகாரிகளிடம் வாக்குவாதம் - பரபரப்பு


தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் புதிதாக கட்டப்பட்ட வீட்டு வசதி வாரிய குடியிருப்புக் கட்டடத்தில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்க அரசு முடிவு செய்திருந்தது. இதனை அறிந்த, அப்பகுதி மக்கள், சிகிச்சை மையம் அமைத்தால், தொற்று பரவும் என்ற அச்சத்தால், சாலையில் மரங்கள் மற்றும் தகரங்களை கொண்டு வழி மறித்து, சிகிச்சை மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், ஆய்வு மேற்கொள்ள வந்த அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



பெரியார் சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு


திருப்பூரில் பல்வேறு அமைப்பினர், போராட்டங்கள் அறிவித்துள்ள நிலையில், அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு போலீசார் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர். அதன்படி, அண்ணா மற்றும் பெரியாரின் சிலைகள் அமைந்துள்ளது இடத்தில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 5 போலீசார் வீதம், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


அடிபட்ட பாம்பிற்கு சிகிச்சை அளித்த கால்நடை மருத்துவர்கள் 

உலக பாம்புகள் தினத்தில், பாம்பிற்கு மருத்துவம் பார்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரத்தை சேர்ந்த பாம்பு ஆர்வலரான மணி, பொதுமக்கள் அளித்த தகவலை தொடர்ந்து பாம்பு ஒன்றை பிடித்தார். ஆனால், பாம்பு பிடிபட்டது முதல் வலியால் துடித்துக் கொண்டிருந்ததை கண்ட அவர், கடலூருக்கு கொண்டு சென்று கால்நடை மருத்துவரிடம் காட்டினார். இதையடுத்து, பாம்பை ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்கள் தலையில் பலமாக அடிபட்டு இருந்ததால், அதற்கான சிகிச்சை அளித்து குளுகோஸ் ஏற்றினர்.


தேங்காய் சுட்டு ஆடிப் பண்டிகையை கொண்டாடிய சிறுவர்கள்


தருமபுரி மாவட்டம், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் ஆடிப் பண்டிகை கொண்டாடப்பட்டது. கொரோனா ஊரடங்கால் தீர்த்தமலை, அனுமன் தீர்த்தம் உள்ளிட்ட கோவில்கள் மற்றும் தென்பெண்ணையாறு உள்ளிட்ட நீர் நிலைகளில் பொதுமக்கள் நீராட முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். இருப்பினும், சிறுவர்கள் தங்களது பெற்றோருடன் சேர்ந்து தேங்காய் சுட்டு ஆடிப் பண்டிகையை கொண்டாடினர்.

-----------------------------------------------

Next Story

மேலும் செய்திகள்