தங்க கடத்தல் விவகாரத்தில் அடுத்த அதிரடி - ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கரன் பணியிடை நீக்கம்
திருவனந்தபுரம் தங்க கடத்தல் விவகாரத்தின் அடுத்த அதிரடியாக, முதல்வரின் செயலாளராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
திருவனந்தபுரம் தங்க கடத்தல் விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும், சுவப்னா சுரேஷிடம், சிவசங்கரன் நெருங்கிய தொடர்பில் இருந்தது அம்பலமானது. அவரை கேரள முதல்வரின் செயலாளர் மற்றும் கேரள அரசின் தொழில் நுட்பத்துறை செயலாளர் பதவியிலிருந்து நீக்கி முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டார். அதன் பின்னர் சுங்கத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், தங்க கடத்தல் கும்பலுக்கு தலைமைச் செயலகம் அருகிலேயே அறை வாடகைக்கு எடுத்துக் கொடுத்தது, கும்பலை சேர்ந்த சுவப்னா சுரேஷ், சந்தீப் நாயர், சரித் ஆகியோருடன் பலமுறை போனில் பேசியது உள்ளிட்ட பல்வேறு தகவல்களை சுங்கத்துறை கைப்பற்றியது. இதனால் இவரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலுவாக குரல் கொடுத்தனர். அதைத் தொடர்ந்து ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்ட முதலமைச்சர் பினராயி விஜயன், அவர் மீது துறை ரீதியான விசாரணை நடைபெறும் என்றார்.
Next Story

