குடல் அழற்சி நோயாளிகள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முறைகள் என்ன? - நிபுணர் டாக்டர் கே.ஆர்.பழனிசாமி குழுவினர் விளக்கம்

கொரோனா பரவல் காலகட்டத்தில் குடல் அழற்சி நோயாளிகள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முறைகள் என்ன? என்பது பற்றி செரிமான நலத்துறை சிகிச்சை நிபுணர் டாக்டர் கே.ஆர்.பழனிசாமி குழுவினர் விளக்கம் அளித்துள்ளனர்.
குடல் அழற்சி நோயாளிகள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முறைகள் என்ன? - நிபுணர் டாக்டர் கே.ஆர்.பழனிசாமி குழுவினர் விளக்கம்
x
இது தொடர்பாக நடைபெற்ற ஆலோசனை நிகழ்ச்சியில் செரிமான நலத்துறை சிகிச்சை நிபுணர்களான டாக்டர்கள் வி.பாலசுப்பிரமணியன், அசோக் சாக்கோ, பி.பிரமநாயகன் ஆகியோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் குடல் அழற்சி நோயாளிகளின் சந்தேகங்களுக்கு காணொலி வாயிலாக மருத்துவக்குழுவினர் ஆலோசனைகள் வழங்கினர். மற்ற நோயாளிகளை ஒப்பிடுகையில், குடல் அழற்சி நோயாளிகளுக்கு குறைந்த அளவே கொரோனா தொற்று ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். குடல் அழற்சி நோயாளிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால், மருத்துவரின் ஆலோசனையுடன் குடல் அழற்சிக்கான சிகிச்சையை நிறுத்திவிட வேண்டும் என்றும், மீண்டும் கொரோனா தொற்று நீங்கியதும், சிகிச்சையை தொடரலாம் என்றும் நிபுணர்கள் தெரிவித்தனர். மலச்சிக்கல் இருக்கும் குடல் அழற்சி நோயாளிகள், வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ள ஆரஞ்சு பழத்தை உட்கொள்ளலாம் என்றும் மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினர்.


Next Story

மேலும் செய்திகள்