ராணுவ வீரர் வீட்டில் நடந்த இரட்டை கொலை சம்பவம் : குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை
சிவகங்கை அருகே முடுக்கூரணி கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் வீட்டில் நகைக்காக 2 பெண்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர்.
சிவகங்கை அருகே முடுக்கூரணி கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் வீட்டில் நகைக்காக 2 பெண்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர். குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டும் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை. இதனிடையே இறுதி சடங்கில் அமைச்சர் பாஸ்கர் மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது அவர்களை முற்றுகையிட்ட மக்கள், குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என தெரிவித்தனர். கடந்த ஒரு ஆண்டாக தங்கள் பகுதியில் அதிகளவில் குற்றச்சம்பவங்கள் நடப்பதால் உரிய பாதுகாப்பு வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
Next Story

