"வெளிநாடுகளில் உள்ள உறவினர்களுடன் போனில் பேச வேண்டும்" - சிறையில் உள்ள நளினி, முருகனுக்கு அனுமதி அளிக்க கோரிக்கை

வெளிநாடுகளில் வசிக்கும் உறவினர்களுடன் நளினி, முருகனை பேச அனுமதிப்பது குறித்து விளக்கமளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வெளிநாடுகளில் உள்ள உறவினர்களுடன் போனில் பேச வேண்டும் - சிறையில் உள்ள நளினி, முருகனுக்கு அனுமதி அளிக்க கோரிக்கை
x
வெளிநாடுகளில் வசிக்கும் உறவினர்களுடன் நளினி, முருகனை பேச அனுமதிப்பது குறித்து விளக்கமளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் உள்ள  நளினி, முருகன் லண்டன் மற்றும் இலங்கையில் உள்ள உறவினர்களுடன் வாட்ஸ் ஆப் வீடியோ மூலம் பேச அனுமதி கோரி நளினியின் தாய் பத்மா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை அனுமதிப்பதற்கு  மத்திய அரசுக்குத்தான் அதிகாரம் உள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது. இதுகுறித்து மத்திய அரசு  பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூலை  24ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்