விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கிடைப்பதை அரசு உறுதி செய்யும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தகவல்

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்யும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
x
இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்தபடி காணொலி காட்சி வாயிலாக ஓசூரில் 20 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைய உள்ள பன்னாட்டு மலர் ஏல மையத்திற்கு அடிக்கல் நாட்டினார். இதனையடுத்து மாவட்ட வளர்ச்சி மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார். பிறகு சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் கூட்டம் நடைபெற்றது. மேலும் மாவட்டத்தில் உள்ள விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார். அப்போது விவசாய பிரதிநிதிகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தை "மா" ஏற்றுமதி மையமாக மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இலவச மின்சாரம் கிடைப்பதை அரசு உறுதி செய்யும் என்றும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்