போயஸ் தோட்டத்தை நினைவு இல்லமாக்கும் முடிவு - எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி

போயஸ்தோட்ட இல்லம் தொடர்பாக நீதிமன்றம் தெரிவித்த உத்தரவை அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
x
ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதை எதிர்த்து போயஸ்கார்டன் கஸ்தூரி எஸ்டேட் உரிமையாளர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கு, நீதிபதி ஆனந்த்வெங்கடேஷ் முன் இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஊரடங்கு நேரத்தில் கையகப்படுத்த அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், வாரிசுகளை விசாரிக்காமல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.  இதற்கு பதிலளித்த தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், கடந்த 2017 அக்டோபர் மாதம் முதல் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், இல்லத்தில் உள்ள அசையா சொத்துக்களை கையகப்படுத்தவே அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டதாக கூறினார். இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தற்போதைய நிலையில் கையகப்படுத்தும் நடவடிக்கையில் தலையிட எந்த காரணமும் இல்லை எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்