தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை - மக்கள் மகிழ்ச்சி
பதிவு : ஜூலை 15, 2020, 09:46 AM
தஞ்சாவூர், திருவையாறு, ஒரத்தநாடு, நாஞ்சிக்கோட்டை, வல்லம் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் நல்ல மழை பெய்தது.
தஞ்சை சுற்றுவட்டாரத்தில் நல்ல மழை - விவசாயிகள் மகிழ்ச்சி 


தஞ்சாவூர், திருவையாறு, ஒரத்தநாடு, நாஞ்சிக்கோட்டை, வல்லம் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் நல்ல மழை பெய்தது. இரவு நேரத்தில் விட்டுவிட்டு பெய்த மழையால், வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவுகிறது. தண்ணீர் பற்றாக்குறையால் வாடிய விவசாயிகள், மழையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

திருச்சியில் கனமழை - பாலக்கரை, காஜாமலை, உறையூர் பகுதிவாசிகள் மகிழ்ச்சி


திருச்சியில் ஒருமணி நேரத்துக்கும் மேல், இடி - மின்னலுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. வெயில் வாட்டி வதைத்த நிலையில், பாலக்கரை, கண்டோன்மென்ட், தில்லைநகர், பீமநகர், கே.கே.நகர், காஜாமலை, விமான நிலையம், உறையூர்  பகுதிகளில் பெய்த மழை, மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

பாணாதுறை, தாராசுரம், உள்ளூர், கொரநாட்டு கருப்பூர் பகுதியில் மழை 

கும்பகோணத்தில் நான்கு மணி நேரத்துக்கும் மேல் மழை வெளுத்து வாங்கியது. பாணாதுறை, தாராசுரம், உள்ளூர், கொரநாட்டு கருப்பூர், செட்டி மண்டபம் பகுதிகளில் நல்ல மழை பெய்தது. குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ந்துள்ளனர். வீதிகளில் தண்ணீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்

சூறைக்காற்றுடன் கொட்டிய மழை - மின்தடை ஏற்படுத்தி பாதுகாப்பு


அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சூறைக் காற்றுடன் பெய்த மழையால், மின்தடை ஏறப்ட்டது. கடாரங்கொண்டான், ஆண்டிமடம், தா.பழூர், மீன்சுருட்டி, உடையார்பாளையம், பெரிய வளையம், உட்கோட்டை, ஆயுதங்களம் பகுதிகளில் வீசிய காற்றால், மின்கம்பிகளில் மரங்கள் விழுந்தன

ஆடுதுறை, கதிராமங்கலம்,  திருப்புவனம் பகுதியில் நல்ல மழை


தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா பகுதிகளில், இடி மின்னலுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. ஆடுதுறை, கதிராமங்கலம், வேப்பத்தூர், திருப்புவனம், திருப்பனந்தாள் பகுதிகளில் நல்ல மழை பெய்தது. திருவிடைமருதூர் வீதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

கனமழையால் வெப்பம் தணிந்து இதமான சூழல் - விவசாயிகள் மகிழ்ச்சி

கடலூர் மாவட்டம் சிதம்பரம் சுற்றுப் பகுதிகளில் பெய்த மழையால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். புவனகிரி, சிவக்கம், முகையூர், லால்பேட்டை, நெடுஞ்சேரி, கூடுவெளிசாவடி, காட்டுமன்னார்கோவில், பெருங்காலூர் பகுதிகளிலும் கனமழை கொட்டியது

மேலூர், கீழையூர், நாவினிபட்டி, நரசிங்கம்பட்டி பகுதியில் மழை


மதுரை மாவட்டம் மேலூர், கீழையூர், நாவினிபட்டி, நரசிங்கம்பட்டி, எட்டிமங்கலம், திருவாதவூர் பகுதிகளில் நல்ல மழை பெய்தது. தொடர்மழை எதிரொலியால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது

தொடர்புடைய செய்திகள்

"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.

182 views

கனமழை : பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்ட பொதுமக்கள்

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் எமரால்டு உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

168 views

மஞ்சளாறு அணையில் நீர் திறப்பு - குடிநீர் தேவைக்காக 10 கனஅடி நீர் வெளியேற்றம்

பெரியகுளம் மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மஞ்சளாறு அணையில் இருந்து, குடிநீர் தேவைக்காக நீர் திறக்கப்பட்டுள்ளது.

50 views

பிற செய்திகள்

வேதா நிலையம் - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை கையகப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

102 views

டேங்கர் லாரிகளில் இருந்து பெட்ரோல், டீசல் திருட்டு - 9 பேரை கைது செய்து போலீசார் விசாரணை

புழல் அருகே டேங்கர் லாரிகளில் இருந்து எரிபொருளை திருடி அதை கலப்படம் செய்து வந்த 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

28 views

தென் மாவட்டங்களில் தொழில் துவங்குவதற்கு முன்வரவேண்டும் - முதலமைச்சர் பழனிசாமி

தென் மாவட்டங்களில் தொழில் துவங்குவதற்கு முன்வரவேண்டும் என்பதே அரசின் விருப்பம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

4 views

இலங்கை தாதா உயிரிழந்த விவகாரம் - போலி ஆதார் எடுக்க பயன்படுத்திய ஆவணங்கள் சிக்கின

இலங்கை தாதா உயிரிழந்த விவகாரத்தில் போலி ஆதார் எடுக்க பயன்படுத்திய ஆவணங்கள் மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் சிவகாமி சுந்தரியின் வீட்டில் சிக்கின.

9 views

முதுகலை மருத்துவ தேர்வுகள் திடீரென அறிவிப்பு - வரும் 24ஆம் தேதி தேர்வு - அதிர்ச்சியில் மருத்துவர்கள்

முதுகலை மருத்துவ தேர்வுகள், திடீரென வரும் 24ம் தேதி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதால் முதுகலை மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

66 views

கர்நாடக அணைகளில் தண்ணீர் திறப்பு எதிரொலி - ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளப்பெருக்கு

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.