சென்னையில் குறையும் கொரோனாவின் தாக்கம்

சென்னையில் நேற்று மேலும் ஆயிரத்து 78 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.
சென்னையில் குறையும் கொரோனாவின் தாக்கம்
x
சென்னையில் நேற்று மேலும் ஆயிரத்து 78 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 79 ஆயிரத்து 662 ஆக உயர்ந்து இருக்கிறது. இன்று மட்டும் ஆயிரத்து 858 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 15 ஆயிரத்து 814 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

மதுரை : ஒரே நாளில் அதிகபட்சமாக 450 பேருக்கு கொரோனா


மதுரை மாவட்டத்தில் ஒரே நாளில் அதிகபட்சமாக 450 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 990
ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 2 ஆயிரத்து 667 பேர் குணமடைந்து  வீடு திரும்பியுள்ள நிலையில், 4 ஆயிரத்து 199 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதுவரை 124 பேர் உயிரிழந்துள்ளனர். 

கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் 188 பேருக்கு கொரோனா 


கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் 188 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்து 480 ஆக உயர்ந்துள்ளது. கோவையில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். 338 பேர் குணமடைந்துள்ள நிலையில், ஆயிரத்து 131 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குமரியில் மேலும் 113 பேருக்கு கொரோனா


கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 113 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்து 771 ஆக உயர்ந்துள்ளது. குமரியில் மேலும், 4 குழந்தைகள்,  61 ஆண்கள், 48 பெண்கள் என 113 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் நித்திரவிளை, கொல்லங்கோடு காவல் நிலையங்களை சேர்ந்த போலீசாருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குமரியில் இதுவரை கொரோனாவுக்கு 16 பேர் பலியாகியுள்ளனர்.  

கள்ளக்குறிச்சி : ஒரே நாளில் 57 பேருக்கு கொரோன தொற்று


கள்ளக்குறிச்சி  மாவட்டத்தில் ஒரே நாளில் 57 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை  ஆயிரத்து 904 ஆக உயர்ந்துள்ளது. இதில் 1,075 பேர்  குணமடைந்து வீடு  திரும்பியுள்ளனர். இதுவரை 14 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். கொரோனா தொடர்ந்து, அதிகரித்து வருவதால் கட்டுப்பாட்டு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

விழுப்புரத்தில் மேலும் 121 பேருக்கு கொரோனா


விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 121 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 
ஆயிரத்து 723 ஆக உயர்ந்துள்ளது. இதில் 20 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 669 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஆயிரத்து 34 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்

நீலகிரியில் வேகமாக பரவி வரும் கொரோனா 


நீலகிரியில் கொரோனா வேகமாக பரவி வருவதால், 45 இடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன. நீலகிரியில் இதுவரை 258 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 107 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 150 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்