தன்னார்வல அமைப்பு சார்பில் 500 மரக்கன்றுகள்

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த பனஞ்சேரி கிராமத்தில், தன்னார்வல அமைப்பு சார்பில் இலவச மரக்கன்று வழங்கப்பட்டது.
தன்னார்வல அமைப்பு சார்பில் 500 மரக்கன்றுகள்
x
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த பனஞ்சேரி கிராமத்தில், தன்னார்வல அமைப்பு சார்பில் இலவச மரக்கன்று வழங்கப்பட்டது. புவி வெப்ப மயமாதலை தடுக்கும் வகையில் அப்பகுதியில் 500 மரக்கன்று வழங்கப்பட்டது.  கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் முகக்கவசம் மற்றும் கபசுரக்குடிநீரும் வழங்கப்பட்டது


முதல்வர் பெயரில் "எடப்பாடியார் நகர்" உதயம்


தமிழகத்தில் முதல் முறையாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெயரில் புதிய நகர் உருவாகியுள்ளது. ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதிக்குட்பட்ட தோப்புப்பாளையம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் அடங்கிய புதிய நகர் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நகருக்கு "எடப்பாடியார் நகர்" என எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலம் பெயர் சூட்டி திறந்து வைத்தார். 



மாவட்ட எஸ்.பி.யாக ஜியாவுல் ஹக் பொறுப்பேற்பு


கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த ஜெயச்சந்திரன் திருச்சி மாவட்டத்திற்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து, புதிய காவல் கண்காணிப்பாளராக ஜியாவுல் ஹக் பொறுப்பேற்று கொண்டார். புதிதாக பொறுப்பேற்ற ஜியாவுல் ஹக்கிற்கு மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட போலீசார் வாழ்த்து தெரிவித்தனர். அப்போது, செய்தியாளர்களை சந்தித்த அவர், பொதுமக்கள் எந்த நேரத்திலும் தம்மை சந்தித்து புகார் கூறலாம் என்றும், உடனடியாக தீர்வு காணப்படும் எனவும் தெரிவித்தார். 



500 லிட்டர் கள்ளச்சாராயம் அழிப்பு


வேலூர் மாவட்டம் குடியாத்தம், பேரணாம்பட்டு பகுதியை ஒட்டியுள்ள மலைப்பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கோட்டச்சேரி  சாத்கர் உள்ளிட்ட பகுதிகளில் சோதனையில் ஈடுபட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார், 500 லிட்டர் கள்ளச்சாரயம் மற்றும் மூலப்பொருட்களை தீயிட்டு அழித்தனர். தப்பியோடிய குற்றவாளிகளை தேடி வருகின்றனர்


எஸ்.எம்.எஸ். மூலம் கொரோனா பரிசோதனை முடிவு


ராணிப்பேட்டை மாவட்டத்தில், கொரோனா பரிசோதனை முடிவுகள் இனி செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்பாக கொரோனா தொற்று உறுதியானால், சுகாதாரத்துறை அதிகாரிகள், அவர்களின் வீடுகளுக்கு சென்று அழைத்து செல்வார்கள். தற்போது இந்த நடைமுறை மாற்றப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில், இதுவரை 16 ஆயிரத்து 532 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது


மேலும் 80 பேருக்கு கொரோனா - மொத்த பாதிப்பு 400-ஐ தாண்டியது


வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், ஒரே நாளில் 80 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 400-ஐ தாண்டியுள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு, குடியாத்தம் பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


தீயணைப்பு வீரர் உட்பட 5 பேருக்கு கொரோனா


பொள்ளாச்சியில் 5 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் உடுமலை தீயணைப்பு நிலையத்தில் புதிதாக பணிக்கு சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் பணியாற்றிய பொள்ளாச்சி தீயணைப்பு நிலையத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அந்த பகுதி தனிமைபடுத்தப்பட்டது. 


தமிழக - கேரள எல்லை சோதனை சாவடியில் ஆய்வு


தேனி மாவட்டம் லோயர்கேம்பில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு மருத்துவ சோதனை சாவடியை தென்மண்டல ஐஜி முருகன் மற்றும் டிஐஜி முத்துச்சாமி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். அங்கு மேற்கொள்ளப்பட்டும் சோதனை குறித்து போலீசார் மற்றும் வருவாய் துறையினரிடம் அவர்கள் கேட்டறிந்தனர். இதையடுத்து பணியில் உள்ள குறைபாடுகளை கேட்டறிந்த அவர்கள், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்