சாத்தான்குளம் சம்பவம்: சிபிஐ மனு மீது நாளை காலை 11 மணிக்கு விசாரணை - நீதிமன்றம்
பதிவு : ஜூலை 13, 2020, 09:45 PM
சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பை கொலை வழக்காக மாற்றி சிபிஐ பதிவு செய்துள்ளது.
சாத்தான்குளம் தந்தை - மகன் உயிரிழந்த விவகாரத்தை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள், இந்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ள ஸ்ரீதர் உள்ளிட்ட 5 போலீசாரை காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு மீது நாளை காலை 11 மணிக்கு விசாரணை நடைபெறும் என்று தெரிவித்த மதுரை மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம்,  குற்றம் சாட்டப்பட்ட அந்த 5 பேரையும் நேரில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே, ஏற்கனவே சந்தேக மரணமாக பதிவு செய்யப்பட்டடிருந்த சாத்தான்குளம் தந்தை மகன் மரணத்தை கொலை வழக்காக மாற்றி சிபிஐ பதிவு செய்துள்ளது. இதன்படி,  கொலை, தடயங்களை அழித்தல், சட்ட விரோதமாக அடைத்து வைத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த இரட்டை கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக உதவி ஆய்வாளர் ரகு கணேஷ், 4வது குற்றவாளியாக இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

"படப்பிடிப்புகள் நடத்த அனுமதி வழங்க வேண்டும்"- அரசுக்கு கோரிக்கை விடுத்த ஆர்.கே.செல்வமணி

தமிழகத்தில் சினிமா படப்பிடிப்புகள் நடத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும் என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.

388 views

வைகை அணையில் தண்ணீர் திறப்பு- துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்

தேனி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பெய்த தென்மேற்கு பருவமழையின் காரணமாக 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 59 அடியாக உயர்ந்துள்ளது.

314 views

ராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, மக்களவையில் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.

67 views

வேளாண் மசோதாவை திரும்ப பெறக்கோரி போராட்டம் - மசோதா நகல் எரிப்பு-நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

வேளாண் மசோதாவை திரும்ப பெற கோரி சென்னையில் மே 17 இயக்கம் , தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது,.

17 views

பிற செய்திகள்

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு புதிதாக 10 நீதிபதிகள் நியமனம்

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக 10 நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

50 views

பாண்டியர்களின் செப்பு நாணயம் கொண்டு விழிப்புணர்வு - தமிழர்களின் வரலாற்றை செப்புக் காசுகள் மூலம் எடுத்து கூறும் ஓவியர்

மதுரையைச் சேர்ந்த ஓவியர் குணசேகரன், பாண்டியர்களின் செப்பு நாணயத்தில் இருப்பது போல் தமிழர்களின் வாழ்க்கை நெறிமுறைகள், தெய்வ வழிபாடு, கல்வி, சங்கு, சிலம்பு உள்ளிட்டவற்றை செப்புக் காசுகளில் அச்சு எடுத்து, இளைய தலைமுறையினருக்கு களப் பயிற்சி மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

34 views

அக்.1 முதல் "ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்" அமல் - அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் தமிழகம் முழுவதும் அமலாக உள்ள நிலையில் அது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

153 views

7 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை

கொரோனா அதிகம் பாதித்த 7 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

463 views

நீட் தேர்வு முடிவு வெளியாகும் தேதி ஒரு வாரத்திற்குப் பிறகு அறிவிக்கப்படும் - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

நீட் தேர்வு முடிவு வெளியாகும் தேதி ஒரு வாரத்திற்குப் பிறகு அறிவிக்கப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

76 views

காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது, மாநிலங்களவை - மத்திய அரசு பரிந்துரைத்த நிலையில் அதிரடி முடிவு

நாடாளுமன்ற மாநிலங்களவையின் மழைக்கால கூட்டத் தொடர் இன்றுடன் நிறைவடைந்தது.

73 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.