குடிசை மாற்று வாரியத்துக்கு புதிய வீடுகள் கட்ட திட்டம் : பழைய வீடுகளை காலி செய்ய சொன்னதால் போராட்டம்

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் முடிந்த பிறகு, சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் குடிசை மாற்று வாரியத்துக்கு புதிய வீடுகள் கட்டப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
குடிசை மாற்று வாரியத்துக்கு புதிய வீடுகள் கட்ட திட்டம் : பழைய வீடுகளை காலி செய்ய சொன்னதால் போராட்டம்
x
கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் முடிந்த பிறகு, சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் குடிசை மாற்று வாரியத்துக்கு புதிய வீடுகள் கட்டப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 60 ஆண்டுகள் பழமையான வீடுகளை இடித்துவிட்டு, புதிய வீடுகள் கட்டப்படும் என கடந்த மாதம்  குடிசை மாற்று வாரியம் அறிவித்தது. இந்த நிலையில், அடுத்த மாதம் 15 ஆம் தேதிக்குள் வீடுகளை காலி செய்ய வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்ததால், மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதையடுத்து,  புதிய இடத்தில், 66 கோடி ரூபாய் மதிப்பில் 512 வீடுகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணிகள்  நிறைவுபெற்று, மறு அறிவிப்பு வரும் வரை வீடுகளை காலி செய்ய வேண்டாம் என அறிவிக்கப்பட்டதால், மக்கள் நிம்மதி அடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்