இன்று பாடலாசிரியர் நா.முத்துக்குமார் பிறந்த நாள் - 2 முறை தேசிய விருது பெற்றவர்
பதிவு : ஜூலை 12, 2020, 05:42 PM
காஞ்சிபுரம் மாவட்டம் கன்னிகாபுரத்தில் 1975 ஆம் ஆண்டு பிறந்த நா.முத்துக்குமார், தந்தையின் இலக்கிய ஆர்வத்தால் சிறு வயதில் இருந்தே படிப்பதிலும், எழுதுவதிலும் நாட்டம் கொண்டிருந்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் கன்னிகாபுரத்தில் 1975 ஆம் ஆண்டு பிறந்த நா.முத்துக்குமார், தந்தையின் இலக்கிய ஆர்வத்தால் சிறு வயதில் இருந்தே படிப்பதிலும், எழுதுவதிலும் நாட்டம் கொண்டிருந்தார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்றவர். பட்டாம் பூச்சி விற்பவன் எனும் கவிதைத் தொகுப்பின் மூலம் கவனம் பெற்று, இளம் வயதிலேயே இலக்கிய உலகில் சிறந்த கவிஞராக அறியப்பட்டார்.

சினிமாவில் இயக்குநராக வேண்டும் என்ற ஆர்வத்துடன், இயக்குநர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார். முத்துக்குமாரின் கவிதை இயற்றும் திறனைப் பார்த்து வியந்த அவரது நண்பரும், இயக்குனருமான சீமான் தனது "வீரநடை' திரைப் படத்தின் மூலம் நா.முத்துக்குமாரை பாடலாசிரியராக அறிமுகப்படுத்தினார்.

காதல் கொண்டேன்' படத்துக்காக இவர் எழுதிய தேவதையை கண்டேன்.. உள்ளிட்ட பல பாடல்கள், முத்துக்குமாரின் திறமையைப் பறைசாற்றியது. தொடர்ந்து பல படங்களுக்கு பாடல்களை எழுதிய நா.முத்துக்குமார் தமிழ் திரையுலகில் தனக்கென தனியொரு இடத்தைப் பிடித்தார்.

எளிய நடையில் உணர்வுகளைக் குழைத்து எழுதிய காதல் பாடல்கள் இளைஞர்களைப் பெரிதும் கவர்ந்தது.தொடர்ந்து சுட்டும் விழி சுடரே... உருகுதே உருகுதே... பூக்கள் பூக்கும் தருணம்.. என் காதல் சொல்ல நேரம் இல்லை... உள்ளிட்ட ஏராளமான பாடல்களின் மூலம் வெற்றிகரமான பாடலாசிரியராக வலம்வந்தார்,  நா. முத்துக்குமார்.

நா. முத்துக்குமார் பாடல்களில் வரிகளை ஒருபோதும் இசை ஆதிக்கம் செலுத்தாது. அந்தளவிற்கு அவரது வரிகள் கணமானவை.

ஆண்டுதோறும் 100 க்கும் அதிகமான பாடல்களை எழுதி, தமிழ் திரையுலகில் அதிக பாடல்களை எழுதியவர் என்ற சாதனையையும் படைத்தார்.

தந்தையின் அன்பையும், தியாகத்தையும் எடுத்துரைத்த தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் பாடலுக்கு கண் கலங்காதவர் யாருமில்லை.

தங்க மீன்கள் படத்திற்காக நா.முத்துக்குமார் எழுதிய, 
ஆனந்த யாழை மீட்டுகிறாய்... பாடல் தந்தை-மகளுக்கிடையிலான பாசப்பிணைப்பினைப் போற்றியது. இப்பாடலும், சைவம் படத்தில் இடம்பெற்ற அழகே அழகு பாடலும் இவருக்கு 2 தேசிய விருதுகளைப் பெற்றுத்தந்தது.

1990 களின் இறுதியில் திரைத்துறையில் பாடலாசிரியராகப் பயணத்தை தொடங்கிய நா. முத்துக்குமார், மொத்தம் ஆயிரத்து 500 க்கும் அதிகமான பாடல்களை எழுதியிருக்கிறார்.

2 தேசிய விருதுகளுடன் சிறந்த பாடலாசிரியருக்கான மாநில அரசின் விருதையும் ஐந்துமுறை பெற்றிருக்கிறார். சிறுகதைகள், கவிதைகள், உரைநடை என 20 க்கும் அதிகமான நூல்களையும் எழுதியுள்ளார்.

"கிராமம் நகரம் மாநகரம்', "ஆணா ஆவண்ணா", "என்னை சந்திக்க கனவில் வராதே', "குழந்தைகள் நிறைந்த வீடு', "அணிலாடும் முன்றில்' ஆகிய இவரது நூல்கள் பெரிதும் கவனம் பெற்றவை.

தன் உணர்ச்சிப்பூர்வமான அழகான பாடல்களால் திரையுலகையும், அதன் கோடிக்கணக்கான ரசிகர்களையும் திக்குமுக்காடச் செய்த நா. முத்துக்குமார், 2016 ஆம் ஆண்டு தனது 41 வது வயதிலேயே உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவது திடீர் மறைவு திரையுலகையும், இலக்கிய உலகினரையும், ரசிகர்களையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது.தொடர்புடைய செய்திகள்

"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.

301 views

கனமழை : பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்ட பொதுமக்கள்

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் எமரால்டு உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

282 views

மஞ்சளாறு அணையில் நீர் திறப்பு - குடிநீர் தேவைக்காக 10 கனஅடி நீர் வெளியேற்றம்

பெரியகுளம் மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மஞ்சளாறு அணையில் இருந்து, குடிநீர் தேவைக்காக நீர் திறக்கப்பட்டுள்ளது.

102 views

பிற செய்திகள்

"அரசு மருத்துவமனைகளில் 85 சதவீதம் பிரசவம்" - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி

கொரோனா காலத்தில் அரசு மருத்துவமனைகளில் பிரசவ சதவீதம் 60 இருந்து 85 சதவீதமாக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

5 views

உயரும் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் - தண்ணீரை திறந்து விட உத்தரவிடுமாறு கடிதம்

கேரளாவில் பெய்து வரும் தொடர் மழையால் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டும் நிலையில் உள்ளது.

101 views

கேரளாவுக்கு உதவ தயார் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

கேரளாவில் மூணாறு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு மீட்பு பணிகளுக்கு தேவையான உதவியை வழங்க தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்தார்.

12 views

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி - உயிர் பயத்தில் மருத்துவமனையில் இருந்து தப்பியோட்டம்

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி ஒருவர், தாம் இறந்து விடுவோமா என்ற அச்சத்தில், மருத்துவமனையில் இருந்து தப்பி மகளை பார்க்க சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

10 views

முன்னாள் எம்.எல்.ஏ. எம்.கே.பாலன் கொலை வழக்கு - ஆயுள் தண்டனை கைதி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

முன்னாள் எம்.எல்.ஏ. எம்.கே.பாலன் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியான பூங்காநகர் மாணிக்கம் தன்னை முன்கூட்டி விடுதலை செய்ய அரசுக்கு உத்தரவிட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

6 views

சாத்தான்குளம் வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர் பால்துரை உடலுறுப்புகள் செயல்படவில்லை என மனைவி புகார் - தந்தி டிவி செய்தி எதிரொலி - சிகிச்சை தீவிரம்

சாத்தான்குளம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர் பால்துரைக்கு உடலுறுப்புகள் செயல்படவில்லை என்ற புகாரில், தந்தி டி.வி. செய்தி எதிரொலியால் அரசு மருத்துவமனை நிர்வாகம் சிகிச்சையை தீவிரபடுத்தியுள்ளது.

3863 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.