வரிசையில் காத்திருந்து மதுவாங்கிய மதுப்பிரியர்கள்

இன்று முழுஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், மற்றும் பள்ளிபாளையம் பகுதிகளில் மது பிரியர்கள் வரிசையில் காத்திருந்து டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களை வாங்கிச் சென்றனர்.
வரிசையில் காத்திருந்து மதுவாங்கிய மதுப்பிரியர்கள்
x
இன்று முழுஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம்,  மற்றும் பள்ளிபாளையம் பகுதிகளில் மது பிரியர்கள் வரிசையில் காத்திருந்து டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களை வாங்கிச் சென்றனர். இதன் காரணமாக  அனைத்து மதுக்கடைகளிலும் கூட்டம் அலைமோதியது.


கொரோனோ அச்சமின்றி "சரக்கு" வாங்க குவிந்த கூட்டம் 

திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்று வட்டாரப் பகுதியில் 30 -க்கும் மேற்பட்ட அரசு மதுபான கடைகள் இயங்கி வருகிறது
ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால்,  மதுபான கடைகள் செயல்படாது என்பதால் சனிக்கிழமை மாலை முதலே கூட்டம், டாஸ்மாக் கடைகளில் அலைமோதியது. சமூக இடைவெளியை மறந்து ஒருவருக்கொருவர் முண்டியடித்துக் கொண்டு மதுபானங்களை வாங்கிச் சென்றனர். 

வத்திராயிருப்பில் இரவு நேரத்தில் மது வாங்க கூட்டம் கூட்டமாக குவிந்த மது பிரியர்கள்

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் உள்ள மதுபான கடையில், இரவு நேரத்தில் கொரோனா அச்சம் இன்றி, மதுபிரியர்கள் கூட்டம் கூட்டமாக வந்ததுடன்,   சமூக இடைவெளி இன்றின்றியும்  மது பாட்டில்களை  வாங்கி சென்றனர்.

சமூக விலகல் இன்றி மதுவாங்க அலை மோதிய மதுபிரியர்கள்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பஞ்சு மார்க்கெட்  பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில், சனிக்கிழமை இரவு மதுபான பிரியர்கள் கூட்டம் அலைமோதியது. மதுபானம் வாங்க முண்டியடித்துக் கொண்டும்,  சமூக விலகலை  பின்பற்றாமல் முககவசம்  அணியாமலும் மது வாங்கி சென்றனர். 


Next Story

மேலும் செய்திகள்