வாகன விபத்தில் ராணுவ வீரர் பலி - ராணுவ மரியாதையுடன் சொந்த ஊரில் உடல் அடக்கம்

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே குச்சனூர் பேரூராட்சியில் உள்ள துரைச்சாமிபுரத்தை சேர்ந்த ராணுவ வீரரான அழகுராஜா, ஒடிசா மாநிலத்தில் வாகன ஓட்டுநராக பணியாற்றி வந்தார்.
வாகன விபத்தில் ராணுவ வீரர் பலி - ராணுவ மரியாதையுடன் சொந்த ஊரில் உடல் அடக்கம்
x
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே குச்சனூர் பேரூராட்சியில் உள்ள துரைச்சாமிபுரத்தை சேர்ந்த ராணுவ வீரரான அழகுராஜா, ஒடிசா மாநிலத்தில் வாகன ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இந்திய சீன எல்லையில் அமைந்துள்ள லடாக் ராணுவ தளவாடங்களை ஏற்றி சென்ற போது வாகனம் விபத்துக்குள்ளானதில் பலத்த காயமடைந்த அழகுராஜா உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உடல் சொந்த ஊரில் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

காட்டெருமையை  துரத்திய குடிமகன் - சமூக வலைதளங்களில் வேகமாக பரவும் வீடியோ


ஏற்காடு 5 ரோடு பகுதியில் காட்டெருமை ஒன்று  உலா வந்ததால் அப்பகுதி மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இது குடிமகன் ஒருவன் காட்டெருமையை வீட்டு மாடு என நினைத்து துரத்தியதில் காட்டெருமை ஓடிய காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் , காட்டெருமைகள் ஊருக்குள் வருவதை வனத்துறையினர் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

தேன் எடுக்க சென்றவர் தேனீக்கள் கொட்டி பலி


 திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சுட்டகுண்டா பகுதியை சேர்ந்த சாமு, மலைப்பகுதிக்கு சென்று தேன் எடுப்பதை வழக்கமான தொழிலாக கொண்டுள்ளார். நேற்று இரவு வழக்கமாக தனது நண்பர்கள் ஐந்து பேருடன் தமிழக ஆந்திர எல்லைப் பகுதியில் உள்ள மலைப்பகுதியில் தேன் எடுக்கச் சென்றுள்ளார். அப்போது தேனீக்கள் கொட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

காட்டெருமை தாக்கியதில் ஒருவர் பலி

கொடைக்கானல் நகரில் உள்ள எம்.எம் தெருவை சேர்ந்த மெக்கானிக் ஆன கார்த்திக், ஆண்டவர் பாதம் என்ற இடத்தில் நடந்து சென்றுள்ளார். அப்போது  எதிரே வந்த காட்டெருமை அவரை தாக்கியதில்  அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இதுகுறித்து வனத்துறையினருக்கு காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் கார்த்திக்கின் சடலத்தை மீட்டனர்.

பாலியல்  ரீதியாக டிஎஸ்பி தொல்லை கொடுப்பதாக புகார் - பெண் காவலர் தொடுத்த வழக்கு ஜூலை 13-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு


தேனி மாவட்டம் போடி தாலுகாவை சேர்ந்த பெண் காவலரான செல்வராணி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். இதில் தேனி  டிஎஸ்பி முத்துராஜ் மற்றும் ஆய்வாளர் முருகேசன் தனக்கு பாலியல் மற்றும் பல்வேறு ரீதியாக தொல்லை கொடுப்பதாக கூறியிருந்தார். இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்த போது, விசாரணையை ஜூலை 13 ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்