தமிழகம் முழுவதும் காவல்துறை உயரதிகாரிகளை மாற்றி தமிழக அரசு உத்தரவு
பதிவு : ஜூலை 10, 2020, 10:53 PM
தமிழகம் முழுவதும் மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட காவல்துறை உயர் அதிகாரிகளை பணிமாறுதல் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 51 காவல்துறை உயரதிகாரிகளை பதவி உயர்வு மற்றும் பணிமாறுதல் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை சிறப்பு புலனாய்வு பிரிவு கண்காணிப்பாளர் அரவிந்த், திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பாளராக பொறுப்பேற்க உள்ளார். சென்னை அடையாறு உதவி ஆணையர் பகலவன், பணிமாற்றம் செய்யப்பட்டு கரூர் மாவட்ட கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மாதவரம் உதவி ஆணையர் ரவளி பிரியா, திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் சட்டம் ஒழுங்கு உதவி ஆணையர் பத்ரி நாராயணன், கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார். கோவை நகர சட்டம் ஒழுங்கு உதவி ஆணைய பாலாஜி சீனிவாசன்,  புதுக்கோட்டை மாவட்ட கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சேலம் நகர சட்டம் ஒழுங்கு உதவி ஆணையர் தங்கதுரை ஈரோடு மாவட்ட கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை சைபர் குற்றங்கள் கண்காணிப்பாளர் சண்முகபிரியா, காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார்.சென்னை, மயிலாப்பூர் உதவி ஆணையர் தேஷ்முக் ஷேகர் சஞ்சய் தஞ்சாவூர் மாவட்ட கண்காணிப்பாளராக நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.

180 views

கனமழை : பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்ட பொதுமக்கள்

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் எமரால்டு உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

161 views

மஞ்சளாறு அணையில் நீர் திறப்பு - குடிநீர் தேவைக்காக 10 கனஅடி நீர் வெளியேற்றம்

பெரியகுளம் மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மஞ்சளாறு அணையில் இருந்து, குடிநீர் தேவைக்காக நீர் திறக்கப்பட்டுள்ளது.

50 views

பிற செய்திகள்

இலங்கை தாதா உயிரிழந்த விவகாரம் - போலி ஆதார் எடுக்க பயன்படுத்திய ஆவணங்கள் சிக்கின

இலங்கை தாதா உயிரிழந்த விவகாரத்தில் போலி ஆதார் எடுக்க பயன்படுத்திய ஆவணங்கள் மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் சிவகாமி சுந்தரியின் வீட்டில் சிக்கின.

5 views

முதுகலை மருத்துவ தேர்வுகள் திடீரென அறிவிப்பு - வரும் 24ஆம் தேதி தேர்வு - அதிர்ச்சியில் மருத்துவர்கள்

முதுகலை மருத்துவ தேர்வுகள், திடீரென வரும் 24ம் தேதி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதால் முதுகலை மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

38 views

கர்நாடக அணைகளில் தண்ணீர் திறப்பு எதிரொலி - ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளப்பெருக்கு

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

8 views

காற்றில் பிய்த்து வீசப்பட்ட வீட்டின் கூரை - குழந்தைகளுடன் நிழற்குடையில் தஞ்சமடைந்த பெண்

உதகை எமரால்ட் பகுதியில், வீசிய சூறாவளிக் காற்றில் கூரை வீடுகள் பிய்த்து வீசப்பட்டன.

8 views

தொடர் உச்சத்தில் தங்கம் விலை - ஒரு சவரன் தங்கம் ரூ.43,360க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 368 ரூபாய் உயர்ந்தது.

10 views

கருணாநிதியின் 2-ம் ஆண்டு நினைவு தினம் இன்று...

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் இன்று.

48 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.