தமிழகத்தில் இன்று மேலும் 3,616 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் பரவி வருகிறது.
தமிழகத்தில் இன்று மேலும் 3,616 பேருக்கு கொரோனா
x
தமிழகத்தில் சென்னையை தவிர்த்து , பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இன்று 3 ஆயிரத்து 616 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இன்று மட்டும் 65 பேர் உயிரிழந்துள்ளனர் . மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை ஆயிரத்து 636 ஆக இருக்கிறது.

ஒரே நாளில் 4,545 பேர் குணமடைந்துள்ளனர்

தமிழகத்தில் குணமடைவோர் விகிதம் சற்று அதிகரித்து உள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 4 ஆயிரத்து 545 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்தம் 71 ஆயிரத்து 116 பேர் குணமடைந்துள்ளனர். குறிப்பாக இன்று மட்டும் சென்னையில் 2 ஆயிரத்து 853 பேர் குணமடைந்துள்ளனர். 

சென்னையில் குறையும் கொரோனா பாதிப்பு  - 1,203 பேருக்கு கொரோனா உறுதி 

சென்னையில் தொடர்ச்சியாக 5 நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இன்று ஆயிரத்து 203 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. சென்னையில் 22 ஆயிரத்து 374 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை ஆயிரத்து 120 பேர் உயிரிழந்துள்ளனர்.  

Next Story

மேலும் செய்திகள்