நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த கோரிய வழக்கு - தி.மு.க.வின் மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த கோரிய வழக்கில் திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த கோரிய வழக்கு - தி.மு.க.வின்  மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்
x
இந்த மனு நீதிபதி ராமசுப்ரமணியம் தலைமையிலான அமர்வு முன்பு  இன்று விசாரணைக்கு வந்த போது . உள்ளாட்சி தேர்தலை நடத்த கோரி தாக்கல் செய்யப்பட்ட பிரதான வழக்குடன் திமுகவின்  மனுவும் சேர்த்து விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர். இதேபோல் 13 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை வீடியோ பதிவை தாக்கல் செய்ய வேண்டும் என்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை  உத்தரவுக்கு  தடை கோரி தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த மேல் முறையீடு வழக்கில்  திமுகவின் மனுவையும் சேர்த்து விசாரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. இது தொடர்பாக பதில் அளிக்க தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.  

Next Story

மேலும் செய்திகள்