விருதுநகர் மாவட்டத்தில் ஒரேநாளில் 240 பேருக்கு கொரோனா

விருதுநகர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 240 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
x
விருதுநகர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 240 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,252 ஆக உயர்ந்துள்ளது.  அதேநேரம்  மாவட்டத்தில் இதுவரை 438 பேர்  சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 802 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்றுக்கு இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதுதொடர்பாக தெரிவித்த மாவட்ட ஆட்சியர் கண்ணன், கொரோனா தொற்றின் எண்ணிக்கை  தொடர்ந்து மூன்று நாட்களுக்கு அதிகமாகி பின்னர் குறையும் என்றும், இதனால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்