சிறந்த ஆசிரியர்களுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது - விண்ணப்பிக்க வரும் 11 - ஆம் தேதி கடைசி நாள்

2019 ஆம் ஆண்டுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்காக நாடு முழுவதும் இருந்து ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.
சிறந்த ஆசிரியர்களுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது - விண்ணப்பிக்க வரும் 11 - ஆம் தேதி கடைசி நாள்
x
2019 ஆம் ஆண்டுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்காக நாடு முழுவதும் இருந்து ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. ஆன்-லைன் வழியில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இந்நிலையில், தமிழகத்தில் இதுவரை 115 ஆசிரியர்கள் விண்ணப்பித்து இருப்பதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.  வரும் 11 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதால், தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் ஆன்-லைன் வழியில் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக் கல்வித்துறை கேட்டுக்கொண்டுள்ளது. கடந்த ஆண்டுகளில் 23 விருதுகள் தமிழகத்திற்கு வழங்கப்பட்ட நிலையில், ஒரு சில ஆண்டுகளாக இரண்டு விருதுகள் மட்டுமே வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்