மருத்துவ படிப்பில் ஓ.பி.சி பிரிவினருக்கான இட ஒதுக்கீடு - நாளை மறு தினம் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்

மருத்துவ படிப்பில் ஓ.பி.சி. பிரிவினருக்கான இட ஒதுக்கீடு தொடர்பான, தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை, உச்சநீதிமன்றம் நாளை மறுதினம் விசாரிக்கிறது.
மருத்துவ படிப்பில் ஓ.பி.சி பிரிவினருக்கான இட ஒதுக்கீடு - நாளை மறு தினம் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்
x
இந்தியாவில், OBC பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு கோரி, சலோனி குமாரி என்பவர் தொடர்ந்த வழக்கு ஜூலை 7ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இத​னை சுட்டிக்காட்டி, தமிழக மருத்துவ கல்லூரிகளில் இருந்து மத்திய தொகுப்புக்கு ஒப்படைக்கப்படும் இடங்களில், 50% OBC பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யக்கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கு மீதான விசாரணையை வரும் 9ம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்திருந்தது. ஆனால், உச்சநீதிமன்றத்தில் 27% கோரிய வழக்குக்கும், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்குக்கும் தொடர்பு இல்லை என்பதால், OBC பிரிவினருக்கு 50% கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை உடனடியாக மீண்டும் விசாரணைக்கு எடுக்க வேண்டும் என  மனுவில் தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது. இந்த மனுவையும், மருத்துவ மாணவர் டி.ஜி பாபு தாக்கல் செய்த மனுவையும் உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு ஜூலை 9-ஆம் தேதி விசாரிக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்