66 மூலிகைகள் அடங்கிய சித்த மருந்தினை ஆராயுங்கள் - உயர்நீதிமன்ற மதுரை கிளை

கொரோனாவிற்கு இம்ப்ரோ சித்த மருந்தை பயன்படுத்த உத்தரவிடக் கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு வழங்கி உள்ளது.
x
மதுரையை சேர்ந்த சித்த மருத்துவர் சுப்ரமணியன், பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.அதில், 66 மருத்துவப் பொருட்களை கொண்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் சித்த மருத்துவப் பொடி ஒன்றை தயார் செய்துள்ளதாகவும்,

இது குறித்து அரசு அதிகாரிகளுக்கு மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி மூலமாக தெரிவித்த நிலையில், எவ்வித பதிலும் தரவில்லை என தெரிவித்திருந்தார். இம்ப்ரோ எனும் இந்த மருத்துவப் பொடியை வைராலஜி நிபுணர்கள் பரிசோதித்து முடிவுகளை தருவிக்க, ஆயுஷ் அமைச்சகத்தின் செயலருக்கு உத்தரவிட வேண்டும் என்றும், அவர் தனது மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இம்ப்ரோ மருந்தை மத்திய ஆயுஷ் அமைச்சகம் பரிசோதித்து, அது குறித்த அறிக்கையை ஆகஸ்ட் 3ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.மேலும், இந்திய மருத்துவ முறையை பரிசோதிக்க போதுமான நிதி ஒதுக்குவது குறித்தும்,

மருந்துகளை ஆய்வு செய்து அது தொடர்பான விவரங்களை அரசிதழில் வெளியிட்டு, சாதாரண மனிதரும் பயன்படுத்தும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்