கட்டுமான பொருட்கள் 30 சதவீதம் விலை உயர்வு - மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகும் கட்டுமான பொருட்கள் விலை உயர்வு காரணமாக கட்டுமான தொழில்கள் முடங்கி உள்ளன.
கட்டுமான பொருட்கள் 30 சதவீதம் விலை உயர்வு - மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
x
கடந்த 3 மாதங்களுக்கு மேல் கட்டுமான தொழில் முடங்கிய நிலையில்,  ஊரடங்கு தளர்வுகளில் கட்டுமான வேலைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டன. இந்த நிலையில், கட்டுமான பொருட்கள் விலை உயர்வு காரணமாக பணிகள் தொடங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சிமெண்ட், கம்பி, மணல், செங்கல் ஆகியவற்றின் விலை 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. கட்டுமான தொழிலில் ஈடுபட்ட, வட மாநில தொழிலாளர்கள் பலரும் சொந்த ஊர் சென்றதால், தொழிலாளர் பற்றாக்குறையும் நிலவுகிறது. இதையடுத்து, விலை உயர்வை கட்டுபடுத்த மத்திய மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கட்டுமான நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

Next Story

மேலும் செய்திகள்