ஊரடங்கு காலத்தில் அனைவரும் வீடுகளில் இருந்ததால் மின்சார பயன்பாடு உயர்ந்துள்ளது - அமைச்சர் தங்கமணி

ஊரடங்கு காலத்தில் அனைவரும் வீடுகளில் இருந்ததால் மின்சார பயன்பாடு உயர்ந்துள்ளது என அமைச்சர் தங்கமணி விளக்கம்.
ஊரடங்கு காலத்தில் அனைவரும் வீடுகளில் இருந்ததால் மின்சார  பயன்பாடு உயர்ந்துள்ளது - அமைச்சர் தங்கமணி
x
கொரோனா காலத்தில் வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு சென்று மின்சார அளவை கணக்கெடுப்பதில் சிரமம் இருப்பதை கருத்தில் கொண்டு, முதல் மாதத்தில் எடுக்கப்பட்ட மின் உபயோக அளவை, அடுத்தடுத்த மாதங்களுக்கு கணக்கிட்டு மின்கட்டணம் வசூலிப்பதாக, மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

* அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊரடங்கு காலத்தில் அனைவரும் வீடுகளில் இருந்ததால், மின்சார பயன்பாடு உயர்ந்துள்ளதாக கூறியுள்ளார்.

* இது இயல்பு தான் என்று கூறியுள்ள அமைச்சர், 
இதனை பயன்டுத்தி, கூடுதலாக மின்கட்டணம் வசூலிக்கிறார்கள் என திமுக எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி விஷம பிரச்சாரம் செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.

* மின்துறை அமைச்சர் எந்த பதுங்கு குழியில் ஒளிந்திருக்கிறார் என முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி,கேள்வி எழுப்பியுள்ளதாக கூறிய தங்கமணி,

* கொரோனா காலத்தில் தான் நடத்திய ஆய்வுக்கூட்டங்கள் மற்றும் நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சிகள் குறித்து பத்திரிக்கையில் வந்த செய்திகளில் படித்து தெரிந்து கொள்ளலாம் என பதில் அளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்