முழு ஊரடங்கு இன்று அமலாகும் என அறிவித்த நிலையில் நேற்று மது பானக் கடைகளில் மதுப் பிரியர்களின் கூட்டம் அலைமோதியது
பதிவு : ஜூலை 05, 2020, 09:40 AM
தமிழகம் முழுவதும் எவ்வித தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு இன்று அமலாகும் என அறிவித்த நிலையில் நேற்று மது பானக் கடைகளில் மதுப் பிரியர்களின் கூட்டம் அலைமோதியது
தமிழகம் முழுவதும் எவ்வித தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு இன்று அமலாகும் என அறிவித்த நிலையில், நேற்று மது பானக் கடைகளில் மதுப் பிரியர்களின் கூட்டம் அலைமோதியது

டாஸ்மாக்கில் மது பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பு

சென்னைக்கு மிக அருகில் உள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கின் போது அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்படும் என அறிவித்துள்ளதால், பொன்னேரி சுற்றுவட்டார இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுப் பிரியர்கள் நீண்ட வரிசையில் நின்று மதுபானங்களை வாங்கி சென்றனர்

தமிழகம் முழுவதும் தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு - டாஸ்மாக் கடைகளில் குவிந்த மது அருந்துபவர்கள்

திருச்சி கே.கே நகரில் உள்ள மதுபான கடைகளில் தனி மனித இடைவெளி இன்றியும் முகக் கவசம் அணியாமலும் பலர் மதுபானங்களை வாங்கி சென்றனர். திருவிழாக் கூட்டம் போல் நேற்று காணப்பட்டது

மதுக்கடைகளில் குவிந்த மதுபிரியர்கள் - நீண்ட வரிசையில் நின்று வாங்கி சென்றனர் 

கடலூரில் உள்ள அரசு டாஸ்மாக் மதுகடையில்  கூட்டம் அலைமோதியது. மதுபான பிரியர்கள் ஏராளமானோர் நீண்ட வரிசையில் நின்று மது பாட்டில்களை வாங்கி சென்றனர்.

காற்றில் பறக்க விடப்பட்ட சமூக இடைவெளி

சிதம்பரம் பேருந்து நிலையத்தில் உள்ள 3 டாஸ்மாக் மதுகடைகளிலும், சமூக இடைவெளியை பின்பற்றாமல் முக கவசம் அணியாமலும், மதுப்பிரியர்கள் முண்டியடித்துக் கொண்டு மது வாங்கி சென்றனர். மதுப் பிரியர்களின் கூட்டத்தால் அப்பகுதியில் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளதாக, சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர்

கட்டுக்கடங்காத கூட்டம் - போலீஸ் தடியடி

மதுரை மாவட்டம், திருமங்கலம் நகர் பகுதியில் உள்ள 11 அரசு மதுபான கடைகளிலும் கூட்டம் அலைமோதியது. தகவலறிந்த திருமங்கலம் நகர் போலீசார் மதுபான கடையில் கும்பலாக இருந்தவர்களை லேசாக தடியடி நடத்தி கூட்டத்தை ஒழுங்கு படுத்தினர்

மது வாங்க சமூக இடைவெளியின்றி குவிந்த கூட்டம்

திருப்பூரில், மது பாட்டில்களை வாங்கி குவிக்கும் நோக்கில்  மது பிரியர்கள் டாஸ்மாக் கடைகளில் குவிந்தனர். திடீரென குவிந்தவர்களை கட்டுப்படுத்த வரிசையில் நிற்க வேண்டும் என டாஸ்மாக் ஊழியர்கள் வற்புறுத்தினர். இதனால் நீண்ட நாட்களுக்கு பிறகு மது பிரியர்கள் வரிசையில் நின்று மதுபாட்டில்களை வாங்கி சென்றனர்.

மதுபான பிரியர்களின் அலைமோதிய கூட்டம் - மதுபானம் விற்பனை அபாரம்

ஈரோடு மாநகரின் பெரும்பாலான டாஸ்மாக் மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதியது. விரும்பிய மது கிடைத்தவுடன் ஆனந்தம் அடைந்த மதுபிரியர்கள் மதுவை கையில் வாங்கியவுடன் எல்லையில்லா மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தொடர்புடைய செய்திகள்

இந்திய எல்லையில் முள்வேலிகள் அமைப்பு "இந்தியா வீரர்களை தொந்தரவு செய்ய வேண்டாம்" - சீனா ராணுவத்தினருக்கு அறிவுறுத்தல்

இந்திய - சீன எல்லையில் குருங் மலைகள், மாகர், முக்பாரி, ரெச்சின்லா, பாங்கொங்சோ ஏரிக்கு தெற்கே உள்ள பகுதிகளில் இந்தியா தனது எல்லைகளை சுற்றி முள்வேலி அமைத்துள்ளது.

5349 views

"எல்.ஐ.சி. யை விற்பது அவமானகரமான செயல்" - பிரதமர் மோடி மீது ராகுல்காந்தி பாய்ச்சல்

அரசு நிறுவனங்கள் விற்பனைக்கு என்ற பிரச்சாரத்தை பிரதமர் நரேந்திர மோடி முன்னெடுக்கிறார் என ராகுல்காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.

2370 views

"படப்பிடிப்புகள் நடத்த அனுமதி வழங்க வேண்டும்"- அரசுக்கு கோரிக்கை விடுத்த ஆர்.கே.செல்வமணி

தமிழகத்தில் சினிமா படப்பிடிப்புகள் நடத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும் என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.

339 views

வைகை அணையில் தண்ணீர் திறப்பு- துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்

தேனி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பெய்த தென்மேற்கு பருவமழையின் காரணமாக 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 59 அடியாக உயர்ந்துள்ளது.

274 views

நகராட்சி, மாநகராட்சி தனி அலுவலர் "பதவி காலம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு" - சட்ட முன் வடிவுக்கு தி.மு.க கடும் எதிர்ப்பு

நகராட்சி, மாநகராட்சி தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை டிசம்பர் 31ந் தேதி வரை ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கும் சட்டமசோதா, குரல் வாக்கெடுப்புடன் நிறைவேற்றப்பட்டது.

12 views

பிற செய்திகள்

ஏரியை ஆக்கிரமித்த வீடுகளை அகற்ற கடிதம் - 300க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகள்

சென்னை தாம்பரம் அடுத்த சிட்லபாக்கத்தில் ஏரி மீது ஆக்கிரமித்து வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

5 views

23 நிறுவனங்களின் நிகர நஷ்டம் ரூ.17,423 கோடி - தமிழ்நாடு மின் பகிர்மான கழத்தின் நஷ்டம் ரூ.7,582 கோடி

2017-18 ஆம் ஆண்டில் தமிழக அரசுக்கு சொந்தமான 55 பொதுத் துறை நிறுவனங்களில், 23 நிறுவனங்களின் நிகர நஷ்டம் 17 ஆயிரத்து 423 கோடி ரூபாய் என சட்டமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

6 views

ரூ.10 லட்சம் கேட்டு மனைவிக்கு துன்புறுத்தல் - மனைவி அளித்த புகாரின் பேரில் கணவனை கைது செய்த போலீசார்

வரதட்சணை கொடுக்க மறுத்த மனைவியின் ஆபாசப் படத்தை பேஸ்புக்கில் பதிவிட்ட கணவனை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தின் பின்னணியில் நடந்தது என்ன? என்பதை இப்போது பார்க்கலாம்...

7 views

முன்பதிவு அல்லாத ரயில் பெட்டிகளை ஏசி பெட்டிகளாக மாற்றும் விவகாரம்: "சாமானிய மக்களுக்கு பாதிப்பு" - எஸ்.ஆர்.எம்.யூ எதிர்ப்பு

இந்திய ரயில்வேயை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எஸ்.ஆர்.எம்.யூ. கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

8 views

"கொரோனா பாதிப்பு 10 சதவீதம் குறைந்துள்ளது" - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு 10 சதவீதம் குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

190 views

செயின் பறிக்க சிறுவனுக்கு பயிற்சி.... காட்டிக்கொடுத்த கேமரா..

சென்னையில் செயின் பறிக்க சிறுவனுக்கு பயிற்சி கொடுத்து திருட்டில் ஈடுபடுத்திய சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.