முழு ஊரடங்கு இன்று அமலாகும் என அறிவித்த நிலையில் நேற்று மது பானக் கடைகளில் மதுப் பிரியர்களின் கூட்டம் அலைமோதியது

தமிழகம் முழுவதும் எவ்வித தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு இன்று அமலாகும் என அறிவித்த நிலையில் நேற்று மது பானக் கடைகளில் மதுப் பிரியர்களின் கூட்டம் அலைமோதியது
முழு ஊரடங்கு இன்று அமலாகும் என அறிவித்த நிலையில் நேற்று மது பானக் கடைகளில் மதுப் பிரியர்களின் கூட்டம் அலைமோதியது
x
தமிழகம் முழுவதும் எவ்வித தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு இன்று அமலாகும் என அறிவித்த நிலையில், நேற்று மது பானக் கடைகளில் மதுப் பிரியர்களின் கூட்டம் அலைமோதியது

டாஸ்மாக்கில் மது பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பு

சென்னைக்கு மிக அருகில் உள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கின் போது அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்படும் என அறிவித்துள்ளதால், பொன்னேரி சுற்றுவட்டார இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுப் பிரியர்கள் நீண்ட வரிசையில் நின்று மதுபானங்களை வாங்கி சென்றனர்

தமிழகம் முழுவதும் தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு - டாஸ்மாக் கடைகளில் குவிந்த மது அருந்துபவர்கள்

திருச்சி கே.கே நகரில் உள்ள மதுபான கடைகளில் தனி மனித இடைவெளி இன்றியும் முகக் கவசம் அணியாமலும் பலர் மதுபானங்களை வாங்கி சென்றனர். திருவிழாக் கூட்டம் போல் நேற்று காணப்பட்டது

மதுக்கடைகளில் குவிந்த மதுபிரியர்கள் - நீண்ட வரிசையில் நின்று வாங்கி சென்றனர் 

கடலூரில் உள்ள அரசு டாஸ்மாக் மதுகடையில்  கூட்டம் அலைமோதியது. மதுபான பிரியர்கள் ஏராளமானோர் நீண்ட வரிசையில் நின்று மது பாட்டில்களை வாங்கி சென்றனர்.

காற்றில் பறக்க விடப்பட்ட சமூக இடைவெளி

சிதம்பரம் பேருந்து நிலையத்தில் உள்ள 3 டாஸ்மாக் மதுகடைகளிலும், சமூக இடைவெளியை பின்பற்றாமல் முக கவசம் அணியாமலும், மதுப்பிரியர்கள் முண்டியடித்துக் கொண்டு மது வாங்கி சென்றனர். மதுப் பிரியர்களின் கூட்டத்தால் அப்பகுதியில் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளதாக, சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர்

கட்டுக்கடங்காத கூட்டம் - போலீஸ் தடியடி

மதுரை மாவட்டம், திருமங்கலம் நகர் பகுதியில் உள்ள 11 அரசு மதுபான கடைகளிலும் கூட்டம் அலைமோதியது. தகவலறிந்த திருமங்கலம் நகர் போலீசார் மதுபான கடையில் கும்பலாக இருந்தவர்களை லேசாக தடியடி நடத்தி கூட்டத்தை ஒழுங்கு படுத்தினர்

மது வாங்க சமூக இடைவெளியின்றி குவிந்த கூட்டம்

திருப்பூரில், மது பாட்டில்களை வாங்கி குவிக்கும் நோக்கில்  மது பிரியர்கள் டாஸ்மாக் கடைகளில் குவிந்தனர். திடீரென குவிந்தவர்களை கட்டுப்படுத்த வரிசையில் நிற்க வேண்டும் என டாஸ்மாக் ஊழியர்கள் வற்புறுத்தினர். இதனால் நீண்ட நாட்களுக்கு பிறகு மது பிரியர்கள் வரிசையில் நின்று மதுபாட்டில்களை வாங்கி சென்றனர்.

மதுபான பிரியர்களின் அலைமோதிய கூட்டம் - மதுபானம் விற்பனை அபாரம்

ஈரோடு மாநகரின் பெரும்பாலான டாஸ்மாக் மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதியது. விரும்பிய மது கிடைத்தவுடன் ஆனந்தம் அடைந்த மதுபிரியர்கள் மதுவை கையில் வாங்கியவுடன் எல்லையில்லா மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்