கொள்முதல் செய்துள்ள மருத்துவ உபகரணங்கள் என்னென்ன? - திமுக தலைவர் ஸ்டாலின்

மத்திய அரசு ஒதுக்கிய நிதியில், கொள்முதல் செய்துள்ள மருத்துவ உபகரணங்கள் என்னென்ன என்பது குறித்து, முதலமைச்சர் பழனிசாமி, தெளிவான அறிக்கையை வெளியிட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
கொள்முதல் செய்துள்ள மருத்துவ உபகரணங்கள் என்னென்ன? - திமுக தலைவர் ஸ்டாலின்
x
* மத்திய அரசு ஒதுக்கிய நிதியில், கொள்முதல் செய்துள்ள மருத்துவ உபகரணங்கள் என்னென்ன என்பது குறித்து, முதலமைச்சர் பழனிசாமி,  தெளிவான அறிக்கையை வெளியிட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

* அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,கொரோனா நோய்த்தடுப்பு உபகரணங்கள் வாங்க, 6 ஆயிரத்து 600 கோடி ரூபாய்,ஒதுக்கியுள்ளதாக, மத்திய நிதியமைச்சர் கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

* இந்த நிதி தமிழ்நாட்டிற்குக் கிடைத்ததா இல்லையா? என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

* அந்தத் தொகைக்குக் கொள்முதல் செய்துள்ள மருத்துவ உபகரணங்கள் என்னென்ன என்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி  தெளிவான அறிக்கையை வெளியிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

* பேரிடர் மேலாண்மையில் மத்திய அரசின் வழிகாட்டுதல் படியே நடக்கிறோம் எனக் கூறும் முதலமைச்சர் பழனிசாமி, 

* ஏழை - எளியவர்களுக்கு இலவச அரிசி வழங்குவதில் மட்டும் அதைக் கடைப்பிடிக்க மறுப்பது ஏன் என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்

Next Story

மேலும் செய்திகள்