ராயபுரம் மண்டலத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு

சென்னையில் அதிக தொற்று கண்டறியப்பட்ட ராயபுரம் மண்டலத்தில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது.
ராயபுரம் மண்டலத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு
x
சென்னையில் ராயபுரம், தண்டையார்பேட்டை, திருவிக நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அண்ணா நகர் உள்ளிட்ட மண்டலங்களில் அதிகளவில் நோய் தொற்று கண்டறியப்பட்டது. ஆனால் சமீபகாலமாக சிகிச்சை குணமடைந்து விடு திரும்புவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. சென்னையில் ராயபுரம், தண்டையார்பேட்டை, திருவிக நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அண்ணா நகர் உள்ளிட்ட மண்டலங்களில் அதிகளவில் நோய் தொற்று கண்டறியப்பட்டது. ஆனால் சமீபகாலமாக சிகிச்சை குணமடைந்து விடு திரும்புவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. ராயபுரம் மண்டலத்தில் இதுவரை 6162 பேர் சிகிச்சை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மற்ற மண்டலங்களைக் காட்டிலும் அதிக பட்சமாக 72 சதவீதத்தினர் ராயபுரம் மண்டலத்தில் குணமடைந்துள்ளனர்.  தற்போது ராயபுரம் மண்டலத்தில் 2297 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல் தண்டையார்பேட்டை மண்டலத்தில் 70% பேர் சிகிச்சை குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 1984 ஆக உள்ளது. தேனாம்பேட்டையில் 69 சதவீதத்தினர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில்  2130 பேர் சிகிச்சையில் உள்ளனர். மற்ற மண்டலங்களைக் காட்டிலும் சிகிச்சையில் இருப்பவர்கள் சதவீதம் ராயபுரம், தண்டையார்பேட்டை, தேனாம்பேட்டை உள்ளிட்ட இந்த மூன்று மண்டலங்களில் வெகுவாக குறைந்தது.

Next Story

மேலும் செய்திகள்