சென்னையில் சிகிச்சை பெறுவோர் - 23,581 : குணமடைந்து வீடு திரும்பியவர்கள் - 40,111

சென்னையில் தற்போது, கொரோனா நோய்க்கு எத்தனை பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி, 15 மண்டலங்களில் மொத்தம் 23 ஆயிரத்து 581 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் சிகிச்சை பெறுவோர் - 23,581 : குணமடைந்து வீடு திரும்பியவர்கள் - 40,111
x
அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் 2 ஆயிரத்து 586 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 4 ஆயிரத்து 282 பேர் குணமடைந்துள்ள நிலையில், 88 பேர் உயிரிழந்துள்ளனர். அண்ணாநகர் மண்டலத்தில் 2 ஆயிரத்து 431 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 4 ஆயிரத்து 578 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 88 ஆக உள்ளது. ராயபுரத்தில் தற்போது 2 ஆயிரத்து 297 பேர் சிகிச்சையில் உள்ளனர். இங்கு குணமடைந்தோர் எண்ணிக்கை 6 ஆயிரத்து 162 ஆகவும், பலி எண்ணிக்கை 150 ஆகவும் உள்ளது. தேனாம்பேட்டை மண்டலத்தை பொறுத்தவரை 2 ஆயிரத்து 130 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 4 ஆயிரத்து 966 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ள நிலையில், 151 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். தண்டையார்பேட்டையில் தற்போது ஆயிரத்து 984 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 5 ஆயிரத்து 66 பேர் குணமடைந்துள்ள நிலையில், 143 பேர் உயிரிழந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்